Asianet News TamilAsianet News Tamil

DK Shivakumar Net Worth : கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமாரின் சொத்து மதிப்பை பற்றி இங்கே காணலாம்.

DK Shivakumar's full name, wife, daughters, son-in-law, net worth, family details
Author
First Published May 16, 2023, 11:16 AM IST

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் தனது தொகுதியான கனகபுரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியின் (கேபிசிசி) தலைவராக உள்ளார். டி.கே.சிவகுமாரின் முழுப்பெயர் தொட்டலஹள்ளி கெம்பேகவுடா சிவகுமார். இவர் கெம்பேகவுடா மற்றும் கவுரம்மா தம்பதியரின் மகன்.

இவர் பெங்களூருக்கு அருகிலுள்ள கனகபுராவில் பிறந்தார். அவர் வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர். சித்தராமையா மற்றும் குமாரசாமி ஆட்சியில் அமைச்சராக இருந்துள்ளார். இவர் கனகபுரா தொகுதி எம்.எல்.ஏ. டி.கே.சிவகுமாரின் சகோதரரின் பெயர் தொட்டலஹள்ளி கெம்பேகவுடா சுரேஷ். இவர் 17வது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

DK Shivakumar's full name, wife, daughters, son-in-law, net worth, family details

டி.கே.சிவகுமார் உஷா என்பவரை மணந்தார். அவர்கள் 1993 இல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் ஆபரணா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு ஆகாஷ் என்ற மகனும் உள்ளார். டி.கே.சிவகுமாரின் மகள் ஐஸ்வர்யா மறைந்த காபி டே நிறுவனர் விஜி சித்தார்த்தாவின் மகன் அமர்த்தியாவை மணந்தார். காபி டே நடத்தி வருகிறார்.

அமர்த்தியா எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. அமர்த்தியாவின் தாயார் மாளவிகா கரிஷ்ணன் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகள். அவர் கஃபே காபி டேயின் இயக்குனர். ஐஸ்வர்யா குளோபல் அகாடமி ஆஃப் டெக்னாலஜியை நடத்தி வருகிறார். அது அவளது தந்தைக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரி ஆகும்.

DK Shivakumar's full name, wife, daughters, son-in-law, net worth, family details

இந்தியாவின் பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவர் டி.கே.சிவகுமார். 2018 ஆம் ஆண்டில், அவரது குடும்பத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.850 கோடி. 1400 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது. உஷா சிவகுமாரின் சொத்து மதிப்பு ரூ.153.3 கோடி. இவர்களுக்கு ரூ.61 கோடி மதிப்புள்ள சொத்து உள்ளது. டி.கே.சிவகுமார் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.15 கோடிக்கு மேல் உள்ளது.

இதையும் படிங்க..ஜூலை 1 முதல் ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை நிறுத்தம்.. யார் யாருக்கு பொருந்தும்?

இதையும் படிங்க..டெல்லி விரையும் டி.கே.சிவக்குமார்.. தலைமைக்கு தூதுவிட்ட சித்தராமையா - அடுத்த கர்நாடக முதல்வர் யார்?

Follow Us:
Download App:
  • android
  • ios