Asianet News TamilAsianet News Tamil

வங்கிகளில் அதிக பணம் டெபாசிட் செய்தவர்களா நீங்கள்? ரிலாக்ஸ் பிளீஸ்..வருமான வரித்துறை உங்களை தொந்தரவு செய்யாது..

direct tax-dept
Author
First Published Feb 22, 2017, 10:32 AM IST


வங்கிகளில் அதிக பணம் டெபாசிட் செய்தவர்களா நீங்கள்? ரிலாக்ஸ் பிளீஸ்..வருமான வரித்துறை உங்களை தொந்தரவு செய்யாது..

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என கடந்த நவம்பர் 8 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நிலவிய பணத்ததட்டுப்பாடு தற்போதுதான் ஓரளவுக்கு நீங்கியுள்ளது.

ஆனால் கடந்த 4 மாதங்களாக வங்கியிலிருந்து பணம் எடுக்கவும், போடவும் ரிசர்வ் வங்கி விதித்த கட்டுப்பாடுகள் பொது மக்களை நிம்மதி இழக்க செய்தது.

இந்நிலையில் வங்கி கணக்கில் ரூ.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆபரேஷன் கிளன் மணி  என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளால் பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

5 லட்சம் ரூபாய்க்கு மேல்  டெபாசிட் செய்த 18 லட்சத்துக்கு மேற்பட்டோரிடம் வருமான வரித்துறை இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் விளக்கம் கேட்டுள்ளது.


இந்நிலையில், 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கிகளில் பணம் டெபாசிட் செய்தவர்களை அவர்களை அச்சுறுத்த வேண்டாம் என்று வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது,

இது தொடர்பாக நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டள்ள அறிக்கையில், இந்த நடவடிக்கை சரிபார்த்தல் பணி மட்டுமே என்றும்  எனவே, ஆன்லைன் மூலம் அவர்களை தொடர்பு கொள்ளும்போது, வார்த்தைகளில் கண்ணியம் இருக்க வேண்டும் என வருமான வரித்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவர்களுக்கு  எவ்வித அச்சுறுத்தலும் இருக்கக்கூடாது... நோட்டீஸ் அனுப்பக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

5 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தவர்களை வருமான வரித்துறையினர், நேரில் வரச்சொல்லக்கூடாது என்றும்  தொலைபேசி வழி விசாரணையும் செய்யக்கூடாது  என்று நேரடி வரிகள் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios