திகார் ஆண்கள் சிறைக்கு முதல் முறையாக பெண் அதிகாரியை, கண்காணிப்பாளராக நியமித்துள்ளனர்.

ஆசியாவிலேயே பெரிய சிறைச்சாலையான திகாரில், கிரண்பேடி மற்றும் விமலா மெஹ்ரா ஆகியோர் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர்.

இந்த சிறைச்சாலையில் ஆண்கள், பெண்கள், கடத்தல், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு என தனித்தனி சிறைகள் உள்ளன. இதுவரை இங்குள்ள ஆண்கள் சிறைச்சாலையில், கண்காணிப்பாளராக ஆண் அதிகாரிகள் மட்டுமே வேலை பார்த்துள்ளனர்.

இந்நிலையில், முதல் முறையாக திகார் ஆண்கள் சிறைக்கு பெண் கண்காணிப்பாளராக அன்சு மங்களா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். 1990ம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் இவர் திகார் சிறையில் 3 ஆண்டுகள் ஏற்கனவே பணியாற்றிய அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.