Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவின் 3 புதிய அறிகுறிகள்... மருத்துவர்கள் கொடுத்த அதிர்ச்சி தகவல்..!

கொரோனாவின் புதிய அறிகுறிகளாக தீவிர வயிற்றுப்போக்கு, வாந்தி, தலைவலியும்  இருக்கலாம் என மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். பருவநிலைக்கு ஏற்றார் போல  தன்னை மாற்றிக்கொள்ளும் கொரோனா வைரஸ், நுரையீரலுக்கு பதிலாக செரிமாண மண்டலத்தை தாக்குவதாகவும் கூறப்படுகிறது.
 

Diarrhoea vomiting new coronavirus symptoms
Author
Hyderabad, First Published Jul 8, 2020, 5:39 PM IST

கொரோனாவின் புதிய அறிகுறிகளாக தீவிர வயிற்றுப்போக்கு, வாந்தி, தலைவலியும்  இருக்கலாம் என மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். பருவநிலைக்கு ஏற்றார் போல  தன்னை மாற்றிக்கொள்ளும் கொரோனா வைரஸ், நுரையீரலுக்கு பதிலாக செரிமாண மண்டலத்தை தாக்குவதாகவும் கூறப்படுகிறது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் பெரும் பாதிப்பு மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்த வருகிறது. சளி, இருமல், காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம் போன்றவை கொரோனாவுக்கான பொதுவான அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், கொரோனவால் பாதிக்கப்படுபவர்களுக்கு தீவிர வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் தலைவலி என புதிய அறிகுறிகள் வெளிப்படுவதாக, ஐதராபாத் அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Diarrhoea vomiting new coronavirus symptoms

கடந்த ஜூன் 15ம் தேதி முதல் இத்தகைய புதிய அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளதால் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உணவு ஒத்துக்கொள்ளாததாலும், காலநிலை மாற்றங்களாலும் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படுகிறது என்று கருதப்படும் நிலையில், அவை கொரோனா பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் ஆனது நுரையீரலை தாக்காமல், முதலில் செரிமாண மண்டலத்தை தாக்குவதால், தீவிர வயிற்றுப்போக்கு வாந்தி ஏற்பட்டு, உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறையில் கொண்டுபோய் விடுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் உடல் பலவீனமடைந்து, ஆக்சிஜன், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு குறைந்து திடீரென நிலைகுலைந்து விழும் நிலை ஏற்படுகிறது. கொரோனா வைரஸ் ஆனது காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு தப்பிப் பிழைப்பதோடு, மனிதர்கள் மத்தியில்  தொடர்ந்து பரவுகிறது என மருத்துவ வட்டாரங்கள் விளக்கம் அளிக்கின்றன.

Diarrhoea vomiting new coronavirus symptoms

மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் சுவாச மண்டல பாதிப்பு மூலம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இப்போது செரிமாண மண்டலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்றும், ஆனால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும்போது, அதை கொரோனா என யாரும் சந்தேகிக்க மாட்டார்கள் என்பதும் மருத்துவ வட்டாரங்களை கவலை அடைய செய்துள்ளது. எனவே, இந்த புதிய அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு அவசியம் என்றும், அதேசமயம் பீதியடைய வேண்டியதில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios