தாஜ்மஹாலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் இடித்து விடுங்கள் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தாஜ்மஹால் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாஜ்மஹால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலரும் வந்து செல்வதால் உங்களின் வெளிநாட்டு பரிவர்த்தனை பிரச்னையும் தீர்க்கும்.

உங்களின் அலட்சியத்தால் நாடு தனது மதிப்பை இழந்து வருவது உங்களுக்கு புரியவில்லையா? பலமுறை எச்சரித்தும் தாஜ்மஹாலை காக்க அக்கறை இல்லையா? என மத்திய அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளனர். காற்று மாசுபாட்டால் தாஜ்மஹால் தனது பொழிவை இழந்து வருவதாகவும்,பழுப்பு நிறத்திற்கு மாறி வருவதாக பல ஆய்வுகள் கூறப்பட்டுள்ளன என சுற்றுச்சூழல் மாசுப்பாட்டால் தாஜ்மஹால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

தாஜ்மஹாலை பாதுகாப்பது குறித்து விளக்க அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் அந்த அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கையில் போதிய விவரங்கள் இல்லை என்ற நீதிபதிகள் தாஜ்மஹாலை பாதுகாக்க விருப்பம் இல்லாவிட்டால் அதனை இடித்து விடுங்கள் என்று மத்திய அரசு வழக்கறிஞரை கண்டித்தனர்.

தாஜ்மஹாலை மாசுபட எண்ண காரணம், அதனை தடுப்பது எப்படி என்பதை கண்டறிய சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வருகிற 31-ம் தேதி முதல் இந்த வழக்கு தினந்தோறும் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.