delhi police warning ayyakannu

டெல்லியில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் 5 பேரை அழைத்து டெல்லி காவல்துறையினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 40 நாட்களாக தமிழக விவசாயிகள் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், அன்றாடம் அரசு மற்றும் பொதுமக்கள் கவனத்தை கவரும் வகையில் பல்வேறு வகை போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. எலிக்கறி மற்றும் பாம்புக்கறி உண்பது, அம்மணமாக செல்வது, பெண்களைப் போல் சேலைகளை கட்டிக்கொள்வது, மோடியை போன்று முகமூடி அணிந்துகொண்டு சவுக்கால் அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால், இதுவரை பிரதமர் மோடியோ, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியோ இதுவரை போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை நேரில் சந்திக்கவில்லை.

இந்நிலையில், டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 5 பேரை அழைத்து டெல்லி காவல்துறையினர் கண்டனம் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.