Loksabha election result 2024 நீயா? நானா? வட இந்தியா, மத்திய இந்தியா முன்னிலை நிலவரங்கள் என்ன?
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது.
இந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் பாஜகவுக்கு சாதகமாக இருந்த நிலையில், தேர்தல் முடிவுகள் கடும் போட்டியாக உள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 296 தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 227 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட குறைவான இடங்களிலேயே பாஜக தனியாக முன்னிலை வகித்து வருகிறது. அந்த வகையில், வடக்கு, மத்திய இந்திய மாநிலங்களில் முன்னிலை விவரங்கள் வெளியாகி வருகின்றன.
டெல்லி மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024 முன்னிலை நிலவரம்
பாஜக - 07
ஆம் ஆத்மி - 0
பிற கட்சிகள் - 0
ஒடிசா மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024 முன்னிலை நிலவரம்
பாஜக - 17
பிஜு ஜனதாதளம் - 03
காங்கிரஸ் - 01
பீகார் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024 முன்னிலை நிலவரம்
ஐக்கிய ஜனதாதளம் - 14
பாஜக - 12
ராஷ்ட்ரிய ஜனதாதளம் - 5
லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) - 5
சிபிஐ (எம்எல்)(எல்) - 02
காங்கிரஸ் - 01
ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா - 01
உத்தரப்பிரதேசம் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024 முன்னிலை நிலவரம்
பாஜக - 35
சமாஜ்வாதி - 34
காங்கிரஸ் - 08
ராஷ்ட்ரிய லோக் தள் - 02
ஆசாத் சமாஜ் கட்சி - 01
மேற்குவங்கம் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024 முன்னிலை நிலவரம்
திரிணாமூல் காங்கிரஸ் - 28
பாஜக - 12
காங்கிரஸ் - 01
சிபிஐ(எம்) - 01
பஞ்சாப் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024 முன்னிலை நிலவரம்
காங்கிரஸ் - 07
ஆம் ஆத்மி - 03
ஷிரோமனி அகாலிதளம் - 01
சுயேச்சை - 02
Lok Sabha Election Result 2024 மகாராஷ்டிராவில் முந்துவது யார்?
மத்தியப்பிரதேசம் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024 முன்னிலை நிலவரம்
பாஜக - 29
காங்கிரஸ் - 0
ஜம்மு காஷ்மீர்
ராஜஸ்தான் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024 முன்னிலை நிலவரம்
பாஜக - 13
காங்கிரஸ் - 09
சிபிஐ(எம்) - 01
ராஷ்ட்ரிய லோக் தந்த்ரிக் கட்சி - 01
பாரத் ஆதிவாசி கட்சி - 01
குஜராத் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024 முன்னிலை நிலவரம்
பாஜக - 25
காங்கிரஸ் - 01
ஜம்மு காஷ்மீர் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024 முன்னிலை நிலவரம்
தேசிய மாநாட்டு கட்சி - 02
பாஜக - 02
சுயேச்சை - 01
காங்கிரஸ் - 0
மக்கள் ஜனநாயக கட்சி - 0
ஹரியானா மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024 முன்னிலை நிலவரம்
காங்கிரஸ் - 06
பாஜக - 04
சத்தீஸ்கர் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024 முன்னிலை நிலவரம்
பாஜக - 10
காங்கிரஸ் - 01
சண்டிகர் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024 முன்னிலை நிலவரம்
காங்கிரஸ் - 01
பாஜக - 0
அசாம் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024 முன்னிலை நிலவரம்
பாஜக - 08
காங்கிரஸ் - 04
ஐக்கிய மக்கள் கட்சி, லிபரல் - 01
அசாம் கன பரிஷத் - 01