டெல்லியில் உள்ள இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பெயரிடப்பட்ட நேரு அருங்காட்சியகம் நினைவகம் மற்றும் நூலகம், இன்று முதல் அதிகாரப்பூர்வமாக பிரதான் மந்திரி அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என மறுபெயரிடப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளியன்று நடந்த நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகச் சங்கத்தின் சிறப்புக் கூட்டத்தில், அதன் பெயரைப் பிரதான் மந்திரி அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என மாற்ற முடிவு செய்யப்பட்டது என்று அமைச்சகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அந்த சங்கத்தின் துணைத் தலைவரான பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. தலைவர், நிர்வாகக் குழு, நிருபேந்திர மிஸ்ரா, தனது வரவேற்பு உரையில், பெயரில் மாற்றம் தேவை என்பது ஜனநாயகத்தின் மீதான தேசத்தின் ஆழ்ந்த அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது என்றார்.

9 ஆண்டில் மத்திய அரசு ரூ.2.73 லட்சம் கோடி சேமித்திருக்கிறது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்

ஜவஹர்லால் நேரு முதல் நரேந்திர மோடி வரை அனைத்து பிரதமர்களின் பங்களிப்புகளையும், அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு, அவர்கள் அளித்த பதில்களையும் இந்த நிறுவனம் வெளிப்படுத்துவதால், "பெயர் மாற்றத்திற்கான திட்டத்தை சிங் வரவேற்றார்" என்று அமைச்சகம் வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு பிரதமர்களின் பயணத்தை, வானவில்லின் பல்வேறு வண்ணங்களுடன் ஒப்பிட்டுப் பேசிய சிங், "வானவில்லின் அனைத்து வண்ணங்களும், அதை அழகாக மாற்றுவதற்கு உழைத்ததை நாம் பிரதிபலிக்க வேண்டும் என்றும் சிங் கூறினார். 

இன்று இந்திய திருநாடு தனது 77வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக இதுவரை நேரு நினைவகம் மற்றும் நூலகம் என்று அழைக்கப்பட்ட அந்த நிறுவனம் பிரதம மந்திரி நினைவகம் மாற்றும் நூலகம் என்று அழைக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி திருப்பதி செல்லும் பக்தர்கள் கையில் கம்புடன் தான் போகவேண்டுமாம்!