டெல்லி, ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1-ஆக பதிவாகியுள்ளது. இதனையடுத்து, அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்துள்ளனர். 

ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் வெளியிட்டு உள்ள தகவலில் ரிக்டர் அளவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பாகிஸ்தானின் லாகூருக்கு வடமேற்கில் 173 கி.மீ. தூரத்தில் ஏற்பட்டு உள்ளது. அந்த தாக்கம் டெல்லியில் உணரப்பட்டு உள்ளது. 

மேலும், நாடாளுமன்றம், பிரஸ் கிளப் உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று காவல் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சண்டிகர், நொய்டா, காஷ்மீர் உள்ளிட்ட இடங்களிலும், இமாச்சல பிரதேச மாநிலத்திலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.