டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்‍கு தட்பவெப்ப நிலை இன்று காலை 5 புள்ளி 2 டிகிரி செல்சியஸாக நிலவியது. இதன் காரணமாக கடும் குளிர் வாட்டி எடுக்‍கவே பொதுமக்‍கள் மிகுந்த அவதிக்‍கு ஆளாகினர்.

டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக உறைபனி பொதுமக்‍களை வாட்டி வருகிறது. தட்பவெப்ப நிலையும் குறைந்து காணப்படுகிறது.

இதுவரை இல்லாத அளவுக்‍கு இன்று காலை தட்பவெப்ப நிலை 5 புள்ளி 2 புள்ளி 2 செல்சியஸாக இருந்தது. இது, மேலும் குறைந்து, நாளைய தினம் 4 டிகிரி செல்சியஸாக இருக்‍கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தட்பவெப்ப நிலை குறைந்துள்ளதால் கடும் குளிர் மக்‍களை வாட்டுகிறது. இதனால், நடைபாதையில் வசிப்பவர்கள் தீமூட்டி குளிர் காய்கின்றனர்.

பொதுமக்‍களின் நடமாட்டமும் மிகவும் குறைந்து காணப்பட்டது. மூடுபனி காரணமாக பாலம் பகுதியில் 250 மீட்டர் தொலைவுக்‍கு அப்பால் உள்ள பொருட்களை தெளிவாக காண முடியவில்லை.

இதனிடையே, சிம்லாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக பல இடங்களில் கட்டடங்களும், வாகனங்களும் வெண்ணிற போர்வை போர்த்தியதுபோல பனி படர்ந்து காணப்பட்டது.

இந்த பனிப்பொழிவு காரணமாக, சில இடங்களில் மின் விநியோகமும், வாகனப் போக்‍குவரத்தும் பாதிக்‍கப்பட்டன. ஆயினும், இந்தப் பனிப்பொழிவை சுற்றுலாப் பயணிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்‍கின்றனர்.