தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகி உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த நிலநடுக்கம் அரியானா மாநிலம் பவால் நகர் பகுதியில் இருந்து 13 கி.மீ. தொலைவில் மையம் கொண்டது. பூமிக்கடியில் 10.கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

டெல்லி என்.சி.ஆர். மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் தூங்கிகொண்டிருந்த மக்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

டெல்லியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம், பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நில அதிர்வின் தாக்கம் டெல்லியின் சுற்றுப்புறப்பகுதிகளிலும் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கம் மற்றும் மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை.