Asianet News TamilAsianet News Tamil

Manipur Violence : இந்தியா கூட்டணியை சேர்ந்த 20 எம்பிக்கள்.. மணிப்பூருக்கு செல்லும் காரணம் என்ன? முழு பின்னணி

எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு குழுவை சேர்ந்த 20 எம்பிக்கள் இன்று மணிப்பூர் செல்கின்றனர். இக்குழுவில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Delegation Of 20 INDIA MPs To Visit Manipur Today To Take Stock Of Ground Situation
Author
First Published Jul 29, 2023, 11:23 AM IST

மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும், நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்குள்ளே மட்டுமல்லாமல், வெளியேயும் போராடி வருகின்றன.

பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து விளக்கம் அளிக்காததால், அவரை விளக்கம் அளிக்க வலியுறுத்தும் விதமாக மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மக்களைச் சந்திக்கும் நோக்கில் 'இண்டியா' கூட்டணி எம்.பி.க்கள் மணிப்பூர் செல்வார்கள் என்றும், வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அவர்கள் மணிப்பூரில் இருப்பார்கள் என்றும்  தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Delegation Of 20 INDIA MPs To Visit Manipur Today To Take Stock Of Ground Situation

எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு குழுவில் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகாய் (காங்கிரஸ்), சுஷ்மிதா தேவ் (திரிணாமுல் காங்கிரஸ்), மகுவா மாஜி (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா), கனிமொழி (தி.மு.க.), வந்தனா சவான் (தேசியவாத காங்கிரஸ்), ஜெயந்த் சவுத்ரி (ராஷ்டிரீய லோக்தளம்), மனோஜ் குமார் ஜா (ராஷ்டிரீய ஜனதாதளம்), பிரேமச்சந்திரன் (புரட்சிகர சோஷலிச கட்சி), திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்) ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர்  சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா என்ற எதிர்க்கட்சிகளின் கூட்டணியை சேர்ந்த 20 எம்.பிக்கள் அடங்கிய குழு, மணிப்பூர் சென்று மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஆகஸ்ட் 1 முதல் அதிரடி மாற்றங்கள்.. சிலிண்டர் விலை முதல் வங்கி விடுமுறை வரை - முழு விபரம் இதோ !!

Follow Us:
Download App:
  • android
  • ios