Defexpo 2022 Gandhinagar:காந்திநகரில் பாதுகாப்புத்துறை கண்காட்சி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

குஜராத் மாநிலம் காந்திநகரில் பாதுகாப்புத்துறை சார்பில் 2022ம் ஆண்டுக்கான கண்காட்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

Defexpo 2022: PM Modi inaugurates DefExpo 2022 in Gujarat's Gandhinagar

குஜராத் மாநிலம் காந்திநகரில் பாதுகாப்புத்துறை சார்பில் 2022ம் ஆண்டுக்கான கண்காட்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

பெருமைக்கான பாதை எனும் பெயரில் 12வது ஆண்டாக பாதுகாப்புத்துறை கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சியை தொடங்கி வைக்கவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் இரு நாட்கள் பயணமாக பிரதமர் மோடி குஜராத்துக்கு வந்துள்ளார். 

Defexpo 2022: PM Modi inaugurates DefExpo 2022 in Gujarat's Gandhinagar

இந்த முறை பாதுகாப்புத்துறை கண்காட்சியில், மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் ஸ்டால்கள் அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்புத்துறை கண்காட்சியில் முதல்முறையாக  இந்திய நிறுவனங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன. வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியுடன் செயல்படும் இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பதிவு செய்து நடத்தும் நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களோடு இணைந்து செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன.

குஜராத், உத்தரகண்ட் மற்றும் உ.பி. செல்கிறார் பிரதமர் மோடி... வெளியானது முழு பயண விவரம்!!

இந்த கண்காட்சியை தொடங்கி  வைத்த பிரதமர் மோடி, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டட் நிறுவனம் தயாரித்த ஹெச்டிடி-40 ரக பயிற்சி விமானத்தை வெளியிட்டார். இந்த விமானம் பயிற்சி பைலட்களுக்கு உதவியாகவும், அவர்களுக்கு ஏற்றார்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Defexpo 2022: PM Modi inaugurates DefExpo 2022 in Gujarat's Gandhinagar

2035க்குள் மிக்-29, மிராஜ், ஜாக்குவார் போர் விமானங்களுக்கு ஓய்வு: எம்கே2 இலகு ரகம் சேர்ப்பு

தொழில்துறை மற்றும் ஸ்டார்ட்அப்கள் மூலம் விண்வெளியில் பாதுகாப்புப் படைகளுக்கு புதுமையான தீர்வுகளை உருவாக்கும் நோக்கத்துடன் 'மிஷன் டெஃப்ஸ்பேஸ்' பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதுமட்டுமல்லாமல் குஜராத்தில் தீசா விமானப் படை நிலையத்துக்கும் பிரதமர் மோடி  அடிக்கல் நாட்டினார். 

பாதுகாப்புத்துறை தளவாடங்கள், கருவிகளை உருவாக்கும் 7 புதிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு ஓர் ஆண்டு நிறைவாகவும், இந்த பாதுகாப்புத்துறை கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சியில் 451 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு நிறுவனங்களுடன் செய்யப்பட உள்ளது.

பாரத் ஜோடோ நடைபயணம்: ராகுல் காந்தியுடன், உத்தவ் தாக்கரே, சரத் பவார் பங்கேற்பு

காந்திநகரில் அடல்ஜி பகுதியில் தொடங்கப்பட்டுள்ள மிஷன் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் பள்ளியையும் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.அங்கிருந்த ஆசியர்களிடம் பாடங்கள் குறித்தும், கற்பிப்பது குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.  இந்தப் பள்ளியைத் திறந்து வைக்க பிரதமர் மோடி வந்தபோது மாணவர்கள், மாணவிகள் திரளாக வந்து பூக்களைத் தூவி வரவேற்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios