Deepika Padukone salary for Padmavath

இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி உருவாக்கத்தில் பத்மாவதி திரைப்படம் உருவாக்கப்பட்ட கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த படத்தில் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பா.ஜ.க, ராஜ்புத் கார்னி சேனா, ராஜ்புத் சேனா உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் பத்மாவதி திரைப்படம் பத்மாவத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு நேற்று இந்தியா முழுக்க ரிலீஸ் செய்யப்பட்டது. பத்மாவத் திரைப்படம் ரிலீஸ் செய்யப்படுவதற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. பத்மாவத் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், திரைத்துறையினர் பலரும், பத்மாவத் திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

இந்த படத்தில் ராஜபுத்திர வம்சத்தினர் தெய்வமாக வழிபடும் சித்தூர் ராணி பத்மினி கதாபாத்திரத்தில், தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். வாள் சண்டை, குதிரை சவாரி என பயிற்சிகள் எடுத்து இதில் நடித்துள்ளார்.

சரித்திர கால ஆடைகள், ஆபரணங்கள் அணிந்து ராணியாகவே மாறி இருந்தார். படம் பார்த்தவர்கள் அவரது நடிப்பை பாராட்டி வருகின்றனர். ஆனால், ராஜபுத்திர வம்சத்தை சேர்நத்வர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், தீபிகா படுகோனே போலீஸ் பாதுகாப்புடன் வெளியே சென்று வருகிறார். படம் வெளியான பிறகும் தீபிகா படுகோனேவுக்கு மிரட்டல்கள் விடப்பட்டு வருகின்றன. 

பத்மாவத் திரைப்படத்தில் நடிக்க தீபிகா படுகோனே ரூ.12 கோடி சம்பளம் வாங்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தீபிகா படுகோனே, முந்தைய படங்களில் 10 கோடி ரூபாய்தான் சம்பளமாக வாங்கி இருக்கிறார். 

பத்மாவத் திரைப்படம், வரலாற்று படம் என்பதாலும், அதிக நாள் கால்ஷீட் கொடுக்க வேண்டி இருந்ததாலும் பெரிய தொகை பெற்றிருப்பதாக தெரிகிறது. வேறு எந்த இந்தி நடிகையும் இவ்வளவு சம்பளம் வாங்கியது இல்லை என்றும் திரையுலகம் கூறுகிறது. தீபிகா படுகோனேவுக்கு முன்பாக பிரியங்கா சோப்ராதான் ரூ.11 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.