Asianet News TamilAsianet News Tamil

எங்கும் மரண ஓலம்... தலைநகரில் ஒரே நாளில் 348 பேர் உயிரிழந்ததால் பரிதவிப்பு..!

தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 348 பேர் கொரொனா பாதிக்கப்பட்டு உயிழிரிந்துள்ளனர். மேலும் 24 மணிநேரத்தில் 24,331 பேர் கொரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Death toll everywhere ... 348 people died in a single day in the capital.
Author
Delhi, First Published Apr 24, 2021, 11:13 AM IST

தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 348 பேர் கொரொனா பாதிக்கப்பட்டு உயிழிரிந்துள்ளனர். மேலும் 24 மணிநேரத்தில் 24,331 பேர் கொரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நேற்றைய தினத்தில் இந்திய அளவில் 3,32,730 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்திய அளவில் இதுவரை 1,62,63,695 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,86,920 பேர் மரணமடைந்து உள்ளனர். டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 24,331 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 348 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் தற்போது 92,000 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.Death toll everywhere ... 348 people died in a single day in the capital.

கடந்த 24 மணி நேரத்தில் 348 பெரும், கடந்த வியாழக்கிழமையில் மட்டும் 306 பேரும், புதன்கிழமையில் 249 பேரும், செவ்வாய்க்கிழமையில் 277 பேரும், திங்கள்கிழமையில் 240 பேரும் மரணமடைந்தனர். டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. சில மணி நேரங்களிலேயே டெல்லியில் இருக்கும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தீர்ந்துவிடுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Death toll everywhere ... 348 people died in a single day in the capital.

சமூக வலைத்தளங்களில், குடும்ப உறுப்பினர்களுக்கு ஆக்சிஜன் வேண்டும் என்றும் மருத்துவப் படுக்கைகள் தேவை என்று ஆயிரக்கணக்கான செய்திகள் குவிந்து கிடக்கின்றது. ஏராளமான மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் படுக்கைகள் இல்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் மற்ற மாவட்டங்களிலிருந்து டெல்லிக்கு வரும் ஆக்சிஜன் டாங்கர்கள் நிறுத்தப்படுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று பிரதமரோடு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios