Dancing girl in front of boyfriend home to take revenge!

தன்னை ஏமாற்றிய காதலன் வீட்டு முன்பு பல பெண்கள் முற்றுகையிட்டும், போராட்டம் நடத்தியதையும் பார்த்துள்ளோம். தன்னை ஏமாற்றிய காதலனை அடித்து துவைத்து, திருமணம் செய்து கொண்ட பெண்கள் பற்றியும் நாம் படித்துள்ளோம். அண்மையில் கூட இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. 

காதலிக்கும்போது ஜாலியாக இருந்த காதலன், பின்னர், திருமணத்துக்கு மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண், காதலனை செருப்பால் அடித்து, புத்தி புகட்டி திருமணமும் செய்து கொண்டார்.

இந்த நிலையில், காதலனை பழி வாங்குவதற்காக, பெண் ஒருவர் குடித்துவிட்டதுபோல் பாடல் பாடி, நடனம் ஆடிய சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. டெல்லி அருகே உள்ள குருகிராம் பகுதியைச் சேர்ந்த காதலன் வீட்டு முன்பு பாதிக்கப்பட்ட பெண் வந்து நடனமாடிய அந்த வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமீர்கான் நடித்த 'ராஜா ஹிந்துஸ்தானி' படத்தின் பாடல்களை பாடி அவர் நடனமாடினார்.

காதலித்து ஏமாற்றியதால், காதலனை பழி வாங்கவே இதுபோல் நடந்து கொண்டதாகவும் அந்த பெண் கூறினாள். ஆனால், அந்த பெண் உண்மையில் குடித்துவிட்டுத்தான் நடனமாடினாரா? அல்லது அதுபோல நடித்தாரா? என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

காதலன் வீட்டு முன்பு நடனமாடும் அந்த பெண்ணின் வீடியோ பதிவுகள் தற்போது வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.