மகாராஷ்டிராவில் ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது. 58 பேர் படுகாயங்களுடன் மருத்துவமைனயில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தின் ஷிர்பூர் பகுதியில் ரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று காலை அந்த ஆலையில் 100-க்கு மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ரசாயன ஆலையில் இருந்த கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் தீ மளமளவென அனைத்து இடங்களிலும் பரவியது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது. இந்த தீ விபத்து தொடர்பாக உடனே தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

இந்த தீ விபத்தில் சிக்கி 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 58-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.