வீட்டு உபயோகத்துக்கு ஆண்டுக்கு, 14.2 கிலோ எடையுள்ள 12 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இந்த சிலிண்டர்களை சந்தை விலையில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, மானிய தொகை அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

அதற்கு மேல் சிலிண்டர்கள் பயன்படுத்துவோர் மானியத்துடன் கூடிய சிலிண்டர்களை கூடுதல் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அவ்வப்போது ஏற்ற இறங்கங்களை சந்தித்து வருகிறது.  கடந்த மாதம்  மானியம் இல்லா சிலிண்டர் விலை  குறைக்கப்பட்டு ரூ.637-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதையடுத்து சென்னையில் மானியமில்லா கேஸ் சிலிண்டர் விலை ரூ.62 குறைத்து இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் ரூ.652.50 விற்கப்பட்ட சிலிண்டர், இந்த மாதம் ரூ.590.50 விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்தது.

ஆனால் . மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றமின்றி ரூ.494.35-க்கு விற்பனை செய்யப்படும் என்று எண்ணெய் நிறுவனம் அறிவித்துள்ளது.

சர்சதேச சந்தையில் ஏற்பட்ட விலை மாற்றத்தின் காரணமாக இந்த விலை குறைப்பு ஏற்பட்டுள்ளதாக எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.