Asianet News TamilAsianet News Tamil

ஆந்திராவை துவம்சம் செய்து ஒடிசாவுக்குள் என்ட்ரி கொடுத்த குலாப் புயல்… படகு கவிழ்ந்து மீனவர்கள் உயிரிழப்பு..!

குலாப் ப்யல் கரையை கடந்தபோது கலிங்கப்பட்டினத்தில் மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. மரங்கள் வேரோடு சாய்ந்தன.

Cyclone gulab landfall between north andhra and south odisha 3 dead
Author
Andhra Pradesh, First Published Sep 27, 2021, 10:10 AM IST

குலாப் ப்யல் கரையை கடந்தபோது கலிங்கப்பட்டினத்தில் மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. மரங்கள் வேரோடு சாய்ந்தன.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் உருவெடுத்தது. இந்த புயலுக்கு குலாப் என்று பெயரிடப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குலாப் புயல் வானிலை மையம் கணித்தபடி நேற்று மாலை வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா இடையே கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்தில் மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.

Cyclone gulab landfall between north andhra and south odisha 3 dead

சூறைக்காற்றோடு கனமழையும் கொட்டியதால் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மின்கம்பங்களும் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. , ஆந்திர மீனவா்கள் சென்ற படகு கவிழ்ந்து அதிலிருந்த 6 மீனவா்கள் கடலில் விழுந்தனா். அவா்களில் 3 போ் மீட்கப்பட்டனா். இரண்டு பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

Cyclone gulab landfall between north andhra and south odisha 3 dead

வடக்கு ஆந்திராவில் கரையக் கடந்த குலாப் புயல், ஒடிசாவின் கோராபுட் மாவட்ட கடல் பகுதிக்குள் நுழைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கோராபுட், ராயகடா, கஜபதி மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குலாப் புயலின் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios