திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை மன்னராகி வருவதாகவும் சட்டை – வேட்டியை கிழித்தாலும்ஆட்சியை பிடிக்க முடியாது எனவும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 வாக்குகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றிபெற்றது. திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவர்களை வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

இதையடுத்து அவைக் காவலர்களால் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். திமுக உறுப்பினர்களை வெளியேற்றியதைக் கண்டித்து கிழிந்த சட்டையுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் புகார் தெரிவித்தார்.

அதைதொடர்ந்து எடப்பாடி தலைமையிலான அரசை கவிழ்க்க திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம்,  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை மன்னராகி வருவதாகவும் சட்டை – வேட்டியை கிழித்தாலும் ஆட்சியை பிடிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.