ஊரடங்கு உத்தரவின் போது அனைத்து மாநில அரசுகளும் பின்பற்றப்பட வேண்டிய திருத்தப்பட்ட நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் ஏப்ரல் 20ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

வழிகாட்டு நெறிமுறைகளின் முழு விவரம்..

* அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் அரசு அலுவலங்கள் மட்டும் இயக்க அனுமதி.

* மே 3 வரை விமானம், ரயி்ல், சாலை போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்தும் ரத்து.

* மக்கள் கூடும் அனைத்து இடங்கள், பள்ளி, கல்லூரிகள் இயங்க மே 3 வரை தடை

* விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி

* ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம். ஆனால் மாஸ்க்  அணிவது கட்டாயம்

* பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சுவேலை, மோட்டார் மெக்கானிக் தொழில் செய்வோர் செயல்பட அனுமதி

* சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம். முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

*  மீன், இறைச்சி கடைகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மீன் பிடித்தல், மீன் சார்ந்த பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல அனுமதி.

* வங்கிகள், காப்பீட்டு அலுவலகங்கள், ஏ.டி.எம். திறந்திருக்கும்.

* உணவு, மருத்துகள் உள்ளிட்டவற்றை இணை வர்த்தக நிறுவனங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம்

* பெட்ரோல், சமையல் எரிவாயு சிலிண்டர் நிறுவனங்களுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு

* அனைத்து கல்வி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மே 3ம் தேதி வரை மூடப்டும்..

* திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டு தலங்கள் பொதுக்கூட்டங்களுக்கு தடை தொடரும்

* மத ரீதியான நிகழ்ச்சிகளுக்கு தடை நீடிக்கும்.

* இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கு மேல் கலந்துகொள்ள அனுமதி இல்லை

* அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி. சரக்குகளை ஏற்றிச் செல்லவும், நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லவும், விமானம், ரயில்கள் இயக்கப்படும்.


* விவசாயத்துக்கு தேவையான பொருட்கள் விற்கும் கடைகள், உதிரிபாக விற்பனை கடைகள் திறந்திருக்கும். 

* கிராமப் பகுதிகள், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள ஆலைகள் சமூக இடைவெளியுடன் இயங்கலாம் 

* கனரக வாகன பழுது பார்ப்பு கடைகளை திறக்க அனுமதி

* அரசு நடவடிக்கைகளுக்கான கால் சென்டர் மையங்களை திறக்கலாம்

* கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள், பாதிப்பு உள்ளவர்கள் வசித்ததற்காக முடக்கப்பட்ட பகுதிகளுக்கு தளர்வு பொருந்தாது

* மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பழக்கடைகள், பால் நிலையங்கள், இறைச்சிக்கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.