காதல் திருமணத்திற்கு இருவீட்டார் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் கிராமத்தை சேர்ந்த ஜெகதீஷ் பிரசாத் என்பவரும், அதே கிராமத்தை சேர்ந்த சோனு என்ற பெண்ணும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதனையடுத்து, தனது காதலை பெற்றோர்களிடம் எடுத்து கூறியுள்ளனர். ஆனால், இதற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மனஉளைச்சலில் இருந்த காதல் ஜோடி தற்கொலை செய்ய முடிவெடுத்தனர். 

இந்நிலையில், இன்று இருவரும் கரம்பிடித்தபடி தண்டவாளத்தில் நடந்து சென்ற போது லக்னோவில் இருந்து ஜபல்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.