இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,194-ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  149-ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனாவை வைரஸ் தொற்றை ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், கொரோனா தொற்று பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதை எதிர்கொள்ள முடியாமல் உலக நாடுகளே விழிபிதுங்கி உள்ள நிலையில் இந்தியாவை திணறி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 149-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை  அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 5,194-ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனாவுக்கு இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 149-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கை 402-ஆக உள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று மேலும் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1018 உயர்ந்து முதலிடத்தில்உள்ளது. அடுத்த படியாக 690 பேருடன் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.