Asianet News TamilAsianet News Tamil

கொரோனா உயிரிழப்பு... சீனாவை முந்தி வேதனையில் மூழ்கிய இந்தியா..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா -சீனாவை முந்தி வேதனை படைத்துள்ளது. கொரோனாவால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,634. இந்தியாவில்  இதுவரை 4,706 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் சீனாவை இந்தியா முந்தியுள்ளது. 
 

Coronal deaths ... India overtakes China
Author
Delhi, First Published May 29, 2020, 10:31 AM IST

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா -சீனாவை முந்தி வேதனை படைத்துள்ளது. கொரோனாவால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,634. இந்தியாவில்  இதுவரை 4,706 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் சீனாவை இந்தியா முந்தியுள்ளது. Coronal deaths ... India overtakes China

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 7,466 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாம் காணப்பட்டுள்ளனர். இதுவரை நாளொன்றுக்கு 7,000ஐ கடக்காத கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது முதல் முறையாக 7 ஆயிரத்தினை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1,65,799 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 89,987 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 71,105 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4,706 பேர் உயிரிழந்துள்ளனர்.

 Coronal deaths ... India overtakes China

மகாராஷ்டிரா - 2,598,  டெல்லி - 1,024,  தமிழகம் - 827,  குஜராத் - 367, மேற்குவங்கம் - 344, ராஜஸ்தான் - 251,  ஹரியானா - 123, ஜம்மு காஷ்மீர் - 115, கர்நாடகா - 115, தெலங்கானா - 66, சட்டீஸ்கர் - 29, அசாம் - 25, பஞ்சாப் - 19, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 175 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கையில் சீனாவை முந்தியுள்ளது இந்தியா. தொடர்ந்து அதிகரித்துவரும் தொற்று எண்ணிக்கையால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 2,324பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios