உலகளவில் கொரோனாவால் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 30 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை குறைவுதான்.

இந்தியாவில் கொரோனாவை தடுக்க, மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,555ஆக உள்ளது. கொரோனா பலி எண்ணிக்கை 377லிருந்து 392ஆக அதிகரித்திருப்பதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. 

இந்தியாவை பொறுத்தமட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2801 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிவேகமாக சென்றுகொண்டிருந்த கொரோனா பாதிப்பு, தமிழ்நாட்டில் நேற்று வெகுவாக குறைந்துள்ளது. நேற்று வெறும் 31 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டதால் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 1204ஆக உள்ளது. டெல்லியில் 1561பேரும் ராஜஸ்தானில் 1304 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இரண்டாமிடத்தில் இருந்த தமிழ்நாடு, கொரோனா பாதிப்பில் மெதுமெதுவாக நான்காமிடத்திற்கு வந்துவிட்டது.

மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:

மகாராஷ்டிரா - 2801

டெல்லி - 1561

ராஜஸ்தான் - 1304

தமிழ்நாடு - 1204

மத்திய பிரதேசம் - 730

உத்தர பிரதேசம் - 660

குஜராத் - 650

தெலுங்கானா - 624

ஆந்திரா - 483

கேரளா - 387

ஜம்மு காஷ்மீர் - 278

கர்நாடகா - 260

மேற்கு வங்கம் - 213

ஹரியானா - 199

பஞ்சாப் - 184

பீஹார் - 66

ஒடிசா - 60

உத்தரகண்ட் - 37

சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம் - 33

அசாம் - 32

ஜார்கண்ட் - 27

சண்டிகர் - 21

லடாக் - 17

அந்தமான் நிகோபார் - 11

புதுச்சேரி, கோவா - 7

மணிப்பூர், திரிபுரா - 2.