Asianet News TamilAsianet News Tamil

ஆட்சிக்கு வந்தால் முத்தலாக் தடை சட்டம் ரத்து... காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு..!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முத்தலாக் தடை மசோதா ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவு தலைவர் சுஷ்மிதா தேவ் தெரிவித்திருக்கிறார்.

Congress will abolish triple talaq law
Author
Delhi, First Published Feb 8, 2019, 5:20 PM IST

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முத்தலாக் தடை மசோதா ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவு தலைவர் சுஷ்மிதா தேவ் தெரிவித்திருக்கிறார்.

டெல்லியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய சுஷ்மிதா இதை அறிவித்தார். மேலும் அவர் பேசுகையில், “முத்தலாக் மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டபோது, அதை காங்கிரஸ் எதிர்த்தது. இஸ்லாமிய பெண்களைப் பாதுகாக்கவே முத்தலாக் சட்டம் என்று சிலர் பேசுகிறார்கள். Congress will abolish triple talaq law

ஆனால், இஸ்லாமிய ஆண்களை சிறையில் தள்ள பிரதம்ர் மோடியால் உருவாக்கப்பட்ட ஓர் ஆயுதம்தான் முத்தலாக் தடை சட்டம். இந்தச் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய பெண்கள் போராட்டம் நடத்தியதையும் குறிப்பிட விரும்புகிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் முத்தலாக் தடை சட்டம் நீக்கப்படும்” என்று தெரிவித்தார். Congress will abolish triple talaq law

காங்கிரஸ் மகளிர் பிரிவு தலைவரின் இந்தப் பேச்சுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒரு சாரரை திருப்திப்படுத்த காங்கிரஸ் கட்சி செயல்படுவதாகும் கண்டித்துள்ள பாஜக, ராகுல் காந்தியை இஸ்லாமிய பெண்கள் மன்னிக்கமாட்டார்கள் என்றும் விமர்சத்துள்ளது. ஆனால், காங்கிரஸ் தலைமை அறிவிக்க வேண்டிய விஷயங்களை மற்றவர்கள் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அறிவுறுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios