Congress supporting MJD

கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்க மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு காங்கிரஸ் ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. மேலும், குமாரசாமிக்கு முதலமைச்சர் பதவி விட்டுத்தரவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் நிலையில் இருந்த பாஜகவின் தற்போதைய நிலவரம் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க 6 இடங்கள் தேவை என்பதால் கர்நாடகாவில் அரசியல் ஆட்டங்கள் களைகட்டும் சூட்ழநிலை உருவாகி உள்ளது. 120 இடங்களில் முன்னிலையில் இருந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பாஜக தொட்ணடர்கள் உற்சாகத்தில் திளைத்திருந்தனர். 

காங்கிரஸ் 73 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 41 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இந்த நிலையில், ஆட்சி அமைக்க 112 இடங்கள் தேவை. பாஜக பெரும்பான்மை பெற இன்னமும் 6 இடங்கள் தேவை. காங்கிரஸ் கட்சியுடன், மதச்சார்பற்ற ஜனதா தளம் கை கோர்த்தால் 114 இடங்களில் முன்னிலை என்ற நிலை உள்ளது.

இந்த நிலையில், எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஆதரவளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பதாக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரன் அறிவித்துள்ளார்.

இன்று மாலை கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை இன்று மாலை 4 மணிக்கு முதலமைச்சர் சித்தராமையா சந்திக்கிறார். கர்நாடக மக்கள் அளித்த தீர்ப்பை
மதிக்கிறோம் என்றும் கூறினார். குமாரசாமிக்கு முதலமைச்சர் பதவி விட்டுத்தர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.