ஏழைகளின் பெயரில் நிலத்தை அபகரிப்பதுதான் காங்கிரசின் வேலையே: ராஜீவ் சந்திரசேகர் குற்றச்சாட்டு!!

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் நில அபகரிப்பு மற்றும் பெங்களூரு ஏரிகள் ஆக்கிரமிப்பு போன்ற சட்டவிரோத செயல்கள் நடப்பதாக பாஜக மூத்த தலைவர் ராஜீவ் சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார். விபுதிபூரா, தொட்டனேகுந்தி ஏரிகள் பாதுகாப்பு குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வருகிறது.

Congress policy is grabbing the land for their family says former minister Rajeev Chandrasekhar

கர்நாடகாவில் காங் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தங்களது குடும்பங்களுக்கு நிலத்தை அபகரிப்பதும், அதே நேரத்தில் "நட்பு" அடிப்படையில் பில்டர்களை பெங்களூரின் விலைமதிப்பற்ற ஏரிகளை ஆக்கிரமிக்க அனுமதிப்பதும் என்று சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூருவில் இருக்கும் இரண்டு மிகப்பெரிய ஏரிகளான விபுதிபூரா, தொட்டனேகுந்தி குறித்து பல்வேறு செய்திகளில் செய்தித்தாள்களில் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், இதுகுறித்து ராஜீவ் சந்திரசேகர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு இருக்கும் செய்தியில், ''இந்த ஏரிகள் பாஜகவின் முதல்வர்களான பொம்மை மற்றும் பிஎஸ் எடியூரப்பா ஆட்சிக் காலங்களில் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு வந்தன. 

இந்த நிலையில் இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு இருக்கும் ராஜீவ் சந்திரசேகர், ''இதுதான் கர்நாடகா காங்கிரஸின் ஒட்டுண்ணித்தனம். வெட்கக்கேடானது. ஏழைகளின் பெயரால் காங்கிரஸ் அதிகாரத்தை கைப்பற்றுகிறது. பின்னர், அவர்களது குடும்பங்களுக்கு, பில்டர்களுக்கு,  ஒப்பந்தக்காரர்களுக்கு சேவை செய்கிறார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு டுவீட்டில், ''கர்நாடகாவில் நடந்த மாபெரும் வக்ஃப் நில ஊழல்களை மூடிமறைத்தவர் அன்வர் மணிப்பாடி. அவரது அறிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை. வக்ஃபுபோர்டுகளில் நடந்த ஊழல் பற்றி தெளிவாக குறிப்பிடவில்லை. வக்ஃப் போர்டு யாருக்காக உழைக்க வேண்டுமோ அவர்களுக்காக உழைக்கவில்லை. ஏழை முஸ்லீம்களைப் பாதுகாக்க தேவையான சீர்திருத்தங்கள் செய்யவில்லை. அவர்களுக்காக எந்த பணிகளும் நடக்கவில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்து இருக்கும் பேட்டியில், ''தேர்தலின்போது ஏழைகள் பற்றி காங்கிரஸ் பேசும். ஆட்சிக்கு வந்தவுடன் குடும்ப உறுப்பினர்களுக்கு நிலத்தை அபகரிப்பார்கள். கர்நாடகா முதல்வர் மனைவியின் பெயரில் எவ்வளவு முடா ஊழல் வழக்கு நடந்து இருக்கிறது. கார்கேவின் மகன் ஐந்து ஏக்கர் நிலத்தை திரும்ப ஒப்படைத்துள்ளார். இதுதான் காங்கிரஸ் கட்சியின் கொள்கை'' என்று தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் இருக்கும் இரண்டு மிகப்பெரிய ஏரிகளான விபுதிபூரா, தொட்டனேகுந்தி குறித்து பல்வேறு செய்திகள் செய்தித்தாள்களில் வெளியாகி வந்தன. இந்த நிலையில் இதுகுறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து இந்த பிரச்னையை விசாரிக்கத் துவங்கியுள்ளது. 

பெங்களூருவில் இருக்கும் இந்த இரண்டு ஏரிகளில் அடைக்கப்பட்ட மழைநீர் வடிகால் மற்றும் ஆக்கிரமிப்புகளை பெரிய பிரச்சனையாகக் கண்டறிந்த லோக்ஆயுக்தா அறிக்கையின் மீது ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே (பிபிஎம்பி) தலைமை ஆணையர் மற்றும் பிற அதிகாரிகளிடம் தேசிய பசுமை தீர்ப்பாயம் பதில் கேட்டுள்ளது.

என்ஜிடி தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வு சமீபத்தில் அளித்த உத்தரவில், விபூதிபுரா ஏரியில், நுழைவு வாயில் சிதைக்கப்பட்டுள்ளது. வேலிகள் அழிக்கப்பட்டுள்ளன. வளாகத்திற்குள் சட்டவிரோதமான கட்டமைப்புகள் இருப்பதையும் அதிகாரிகள் கண்டறிந்ததாக தெரிவித்துள்ளது. 

பெங்களூருவில் சமீப ஆண்டுகளில் மழை அதிகமாக பெய்தால் நகருக்குள் வெள்ளம் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதற்குக் காரணம் நகருக்குள் இருக்கும் ஏரிகளை தூர்வாராதது மற்றும் ஆக்கிரமிப்புகள் என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.

முடா வழக்கு:

இத்துடன் கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவின் மனைவி சட்ட விரோதமாக பெற்ற 14 குடியுருப்புகளை திரும்ப ஒப்படைக்க முன் வந்துள்ளார். இந்த குடியிருப்புகளின் தற்போதைய மதிப்பு ரூ. 56 கோடி. சட்டவிரோத பண பரிமாற்றம் சட்டத்தின் கீழ் சித்த்ராமையாவின் மனைவி மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மைசூரு லோக் ஆயுக்தா இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு சித்தராமையா மனைவி பார்வதி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு உத்தரவு பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

வக்ஃப் திருத்த மசோதா:

வக்ஃப் (திருத்தம்) மசோதாவை ஆய்வு செய்யும் கூட்டு நாடாளுமன்றக் குழு (ஜேபிசி) கூட்டத்தில் இருந்து இன்று எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.  காங்கிரஸ் எம்பிக்கள் கவுரவ் கோகோய் மற்றும் இம்ரான் மசூத், திமுகவின் ஏ ராஜா, சிவசேனா (யுபிடி) அரவிந்த் சாவந்த், ஏஐஎம்ஐஎம்மின் அசாதுதீன் ஒவைசி, சமாஜ்வாதி கட்சியின் மொஹிப்புல்லா மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் ஆகியோர் புறக்கணிப்பு செய்து இருந்தனர். இதற்கும் ராஜீவ் சந்திரசேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios