கவலைப்படாதீங்க! 5 வாக்குறுதிகள் உங்களை சந்தோஷப்படுத்தும் - கர்நாடக மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன ராகுல் காந்தி
கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் இன்று பதவியேற்றனர். இந்த விழாவில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கர்நாடகாவில் கடந்த மே 10 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை 13 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான பாஜக 66 இடங்களையும், , மஜத 19 இடங்களையும் , சுயேச்சைகள் 4 இடங்களையும் பிடித்தது.
பாஜக படுதோல்வி சந்தித்ததை அடுத்து தனது முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார். இதனிடையே கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார். ள்ளதாக கட்சியின் மூத்த தலைவர் வி.சி.வேனுகோபால் அறிவித்தார். இதேபோல் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், இன்று சித்தராமையா பதவி ஏற்பு விழா பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சித்தராமையா கர்நாடக மாநில முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். சித்தராமையாவுக்கு அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இதேபோல் கர்நாடக மாநில துணை முதலமைச்சராக அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கும், அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர் கமல் ஹாசன் உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "பாஜகவின் பணம், அதிகார பலத்தை கடந்து காங்கிரஸ் கர்நாடகாவில் வெற்றி பெற்று இருக்கிறது. பெண்கள் இனி பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம். கர்நாடகாவில் மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் காங்கிரஸ் நிறைவேற்றும். ஊழலற்ற சுதந்திரமான ஆட்சியை காங்கிரஸ் தர இருக்கிறது.
கடந்த 5 வருடங்களாக கர்நாடக மக்கள் மிகவும் துயரத்தில் இருந்தனர். கர்நாடக தேர்தலில் வெற்றி பெற பாஜக அனைத்து பலத்தையும் பயன்படுத்தியது, அவர்களின் அதிகார பலத்தையும் தாண்டி கர்நாடகத்தில் காங்கிரஸ் வென்றது. இனி கவலை தேவையில்லை.
நாங்கள் உங்களுக்கு 5 வாக்குறுதிகளை அளித்துள்ளோம். இன்னும் ஓரிரு மணி நேரத்தில் கர்நாடகாவின் புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. எங்கள் ஐந்து வாக்குறுதிகள் சட்டமாக மாறும். காட்டுவோம். சாதி, மத பேதமின்றி அனைவரையும் ஒன்றாக நடத்தியதே வெற்றிக்கு காரணம்” என்று பேசினார் ராகுல் காந்தி.
இதையும் படிங்க..வெப்பத்தை போக்க வருகிறார் வருண பகவான்.! தமிழ்நாட்டில் கொட்டப்போகும் மழை - எங்கெல்லாம் தெரியுமா?
இதையும் படிங்க..2000 ரூபாய் நோட்டு: சீறிய முதல்வர் ஸ்டாலின்.! திமுகவினரின் சாராய ஆலை விவகாரத்தை தூசி தட்டும் அண்ணாமலை