பிரதமர் மோடி பற்றி அவதூறாகப் பேசியதையடுத்து, டெல்லி போலீஸார் உதவியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெராவை டெல்லி விமானநிலையத்தில் இன்று அசாம் போலீஸார் கைது செய்தனர்.
பிரதமர் மோடி பற்றி அவதூறாகப் பேசியதையடுத்து, டெல்லி போலீஸார் உதவியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெராவை டெல்லி விமானநிலையத்தில் இன்று அசாம் போலீஸார் கைது செய்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில் நாளை முதல் 3 நாட்களுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய அளவிலான மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க டெல்லியில் இருந்து ராய்ப்பூருக்கு செல்லும் இன்டிகோ விமானத்தில் பவன் கெரா ஏறினார்.
அப்போது பவன் கெராவிடம், விமான ஊழியர்கள், தங்களை போலீஸ் அதிகாரி காண விரும்புகிறார்கள். விமானத்தில் இருந்து இறங்குமாறு தெரிவித்தனர். இதையடுத்து, விமானத்தில்இருந்து இறங்கிய பவன் கெராவை டெல்லி போலீஸார் உதவியுடன் அசாம் போலீஸார் கைது செய்தனர்.

டெல்லி போலீஸார் விடுத்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது “அசாம் மாநிலம், ஹப்லாங் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், பவன் கெராவை கைது செய்யக் கோரி அசாம் போலீஸார் உதவி கோரினர். அசாம் போலீஸார் கேட்டுக்கொண்டதன் பெயரில் டெல்லி போலீஸார் டெல்லி விமானநிலையத்தில் வைத்து பவன் கெராவை கைது செய்து, அவர்களிடம் ஒப்படைத்தனர். பவன் கெரா மீதான நடவடிக்கையை அசாம் போலீஸார் எடுப்பார்கள்” எனத் தெரிவித்தனர்
அசாம் மாநிலம் ஹப்லாங் மாவட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா, பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசியுள்ளார். இது தொடர்பாக ஐபிசி 153பி, 500, 504 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆனால், பவன் கெராவை கைது செய்ய எதிர்ப்புத் தெரிவித்து, காங்கிரஸ் நிர்வாகிகள், விமானத்தில் இருந்து கீழே இறங்கி, விமானநிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பவன் கெரா உடைமைகளை விமானத்தில் ஏற்றுவது தொடர்பாக சிக்கல் இருக்கிறது டெல்லி போலீஸாரிடம் பேசுங்கள் என்று விமான அதிகாரிகள், காங்கிரஸ் நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து, பிரச்சினை உருவானது.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஷிண்டே ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ நாங்கள் அனைவரும் இன்டிகோவின் 6இ204 விமானத்தில் இருந்தோம். ஆனால்,எங்கள் சக தோழர் பவன்கெராவை விமானத்தில் இருந்து கீழே இறக்கினார்கள். என்ன விதமான உயர்ந்த குணம், சட்டத்தின் ஆட்சி இருக்கிறதா, எந்த உத்தரவின் அடிப்படையில் கெரா கைது செய்யப்பட்டார்”எ னக் கேள்வி எழுப்பியுள்ளார். விமானம்புறப்படத் தாமதமானதையடுத்து மற்ற பயணிகளை வேறு விமானத்தில் மாற்றி ராய்பூருக்குவிமான ஊழியர்கள் அனுப்பி வைத்தனர்.
இன்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் “ டெல்லி விமானநிலையத்தில் இருந்து ராய்பூருக்கு செல்ல இருந்த 6இ204 விமானத்தில் இருந்த ஒரு பயணி கீழே இறக்கப்பட்டார். மற்ற பயணிகளும் தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் கீழே இறங்கினர். அதிகாரிகளின் ஆலோசனை, அறிவுரையின்படி செயல்பட்டோம், விமானம் தாமதத்துக்கும், பயணிகளின் இடர்பாடுகளுக்கும் வருத்தம் கோருகிறோம்” எனத் தெரிவித்தது.
இதே வேலையாபோச்சு! பெண் பயணி இருக்கையில் சிறுநீர் கழித்த போதை ஆசாமி: இது விமானத்தில் இல்லீங்க!

காங்கிரஸ் மூத்த தலைவர் கேசி.வேணுகோபால் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ மோடி அரசு குண்டர்கள் போல் செயல்பட்டு டெல்லி-ராய்பூர் விமானத்தில் இருந்து பவன் கெராவை கீழே இறக்கியுள்ளது. அவரை காங்கிரஸ் தேசிய மாநாட்டில் பங்கேற்கவிடாமல் தடுத்துள்ளது. போலித்தனமான எப்ஐஆர் பதிவு செய்து பவன் கெராவின் நடவடிக்கை முடக்கப்பட்டுள்ளது, அவர்களை அமைதியாக்கும் முயற்சி வெட்கக்கேடு ஏற்றுக்கொள்ளமுடியாத செயல்” எனத் தெரிவித்தார்.
