Asianet News TamilAsianet News Tamil

காங்கிரஸால் குடும்பம், வாரிசு அரசியலைக் கடந்து சிந்திக்க முடியாது: பிரதமர் மோடி விளாசல்

உங்களால் குடும்பம், வாரிசு அரசியலைக்கடந்து சிந்திக்க முடியாது. வாரிசு அரசியல் இருந்தாலே அங்கு புத்திசாலித்தனம், அறிவுத்திறன் அழிக்கப்பட்டுவிடும் என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாக பிரதமர் மோடி மாநிலங்களவையில் விமர்சித்தார்.

Congress Cant Think Beyond Dynasty: PM Continues Attack
Author
New Delhi, First Published Feb 8, 2022, 1:54 PM IST

உங்களால் குடும்பம், வாரிசு அரசியலைக்கடந்து சிந்திக்க முடியாது. வாரிசு அரசியல் இருந்தாலே அங்கு புத்திசாலித்தனம், அறிவுத்திறன் அழிக்கப்பட்டுவிடும் என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாக பிரதமர் மோடி மாநிலங்களவையில் விமர்சித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மாநிலங்களவையில் இன்று பிரதமர் மோடி பேசியதாவது:

கடந்த 100 ஆண்டுகளாக மனித சமூகம் பார்த்திராத பெருந்தொற்றாக கொரோனா இருந்தது. இந்த பெருந்தொற்று தொடர்ந்து தன்னை மாற்றிக்கொண்டு மக்களுக்கும், இந்த தேசத்துக்கும், உலகத்தும் பெரிய தொந்தரவு கொடுத்தது. இந்த உலகமே இந்த பெருந்தொற்றை எதிர்த்துப் போராடி வருகிறது.

Congress Cant Think Beyond Dynasty: PM Continues Attack

கொரோனா பெருந்தொற்றுதொடங்கியதும் இந்தியாவால் என்ன செய்ய முடியும் என்று ஆலோசிக்கப்பட்டது, உலகிற்கு என்ன தாக்கத்தை இந்தியாவில் ஏற்படுத்த முடியும் என்று ஆலோசிக்கப்பட்டது. ஆனால், கொரோனவுக்கு எதிராகஇந்தியா போராடிய விதத்தைப் பார்த்து, 130 கோடி மக்களின் ஒழுக்கம், மனதிடம் ஆகியவற்றைப் பார்த்து இந்த உலகமே இந்தியாவைப் பாராட்டுகிறது. 

நாட்டில் உள்ள சிறு,குறு,நடுத்தரத் தொழில்கள் அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன. விவசாயிகள் பெருந்தொற்று காலத்திலும் உற்பத்தியை  பெருக்கினார்கள், அவர்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவு விலை அதிகமாக வழங்கினோம். இந்தியா 100 -வதுஆண்டு சுதந்திரத்தினத்தை அடையும்தருவாயில்  இந்த தேசத்தை அடுத்த 25 ஆண்டுகளுக்கு எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்து அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.

சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக முதிர்ச்சியற்ற வகையில் பேசி தேசத்தைச் சோர்வுறச் செய்தனர் .அரசியல் லாபத்துக்காக எவ்வாறு விளையாடுகிறார்கள், காய் நகர்த்துகிறார்கள் என்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். இந்தியத் தடுப்பூசிகளுக்கு எதிராக கடுமையான விஷமப்பிரச்சாரம் செய்யப்பட்டது.

ஆதலால், சிலர் தங்கள் சுயபரிசோதனை செய்வது அவசியமாகும். கொரோனா தொடர்பாக அனைத்துக் கட்சிக்கூட்டம் நடந்தபோது, மத்திய அரசு அனைத்து விவரங்களையும் அளித்திருக்கும். ஆனால், விமர்சித்து பேசிய கட்சிகள் யாரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டத்தைப் புறக்கணித்துச் சென்றனர்.

Congress Cant Think Beyond Dynasty: PM Continues Attack

இந்தியாவுக்கு காங்கிரஸ் கட்சிதான் அடிக்கல் நாட்டியதாக சிலர் கூறுகிறார்கள். பாஜக கொடி மட்டும் ஏற்றுகிறது என்று பேசுகிறார்கள். இந்த அவையில் நகைச்சுவைக்காக இதை சொல்லப்படவில்லை. இது தீவிரமாகச் சிந்திக்க வேண்டியது, ஆபத்தான கருத்து. சிலர் இந்தியா என்பது 1947ம் ஆண்டுதான் உதயமானதாக நினைக்கிறார்கள். இந்த சிந்தனையால்தான் பிரச்சினைகளே உருவாகின்றன.

கடந்த 50  ஆண்டுகளாக இந்த தேசத்துக்காகப் பணியாற்ற வழங்கப்பட்ட வாய்ப்பில் இந்த மனநிலைதான் இந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது  இது வக்கிரக்கருத்துக்களால் உருவானது. காங்கிரஸின் பெருந்தன்மையால் ஜனநாயகம் உருவாகவில்லை. 1975ம் ஆண்டு ஜனநாயகத்தை கழுத்தை நெறித்தவர்கள் பேசக்கூடாது.

காங்கிரஸ் இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்று மக்கள் வியக்கிறார்கள். இந்தியா என்பது இந்திரா, இந்திராதான் இந்தியா என்கிறார்கள். மகாத்மாகாந்திகூட காங்கிரஸ் கட்சி அகற்றப்பட வேண்டும் என்று விரும்பினார். காங்கிரஸை அகற்றுவதுதான் மகாத்மா காந்தியின் விருப்பம். தொடர்ந்து காங்கிரஸ் இருந்தால் என்ன நடக்கும் என்ன அழிவு ஏற்படும் என அவருக்குத்தெரியும்.

Congress Cant Think Beyond Dynasty: PM Continues Attack

காந்தியின் விருப்பத்தை நாம் பின்பற்றினால், வாரிசு அரசியல், தெரிந்தவர்களுக்கு வாய்ப்பளித்தல் ஆதரவுஅளித்தல், போன்றவற்றிலிருந்து ஜனநாயகத்தை விடுவிக்கலாம். இந்தியா சுதேசிப் பாதையில் சென்றிருக்கும். ஜனநாயகத்தில் எந்தக் கறையும் இருந்திருக்காது. ஊழல் பலதசாப்தங்களாக நிறுவனமயமாக்கப்பட்டிருக்காது. மதவாதம், சாதியவாதம் இருந்திருக்காது. சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கமாட்டார்கள்.

காஷ்மீரிலிருந்து யாரும் வெளியேற்றப்பட்டிருக்கமாட்டார்கள். தந்தூரியில் பெண்கள் எரிக்கப்பட்டிருக்கமாட்டார்கள். அடிப்படை வசதிகளுக்காகஇ த்தனை ஆண்டுகள் சாமானியர் காத்திருந்திருக்கத் தேவையில்லை. 

இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்


 

Follow Us:
Download App:
  • android
  • ios