பாரத் நியாய யாத்ரா: காங்கிரஸை விமர்சிக்கும் பாஜகவினர்!

பாரத் நியாய யாத்ரா தொடர்பான அறிவிப்பின்போது, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வாய் தவறி கூறிய வார்த்தைகள் பற்றி பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்

Congress bharat nyay yatra BJP and netizens slams jairam ramesh comment

மணிப்பூரில் இருந்து மும்பை வரையிலான பாரத் நியாய யாத்ரா எனும் பெயரில் ராகுல் காந்தியின் அடுத்த நடைபயணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் ராகுல் காந்தியின் நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்த்த நிலையில், பாரத் நியாய யாத்ரா நடைபயணமானது ஜனவரி 14ஆம் தேதி தொடங்கி மார்ச் 20ஆம் தேதி நிறைவடைகிறது.

சுமார் 6,200 கிமீ கொண்ட இந்த யாத்திரையானது, அசாம், மேற்கு வங்கம், பீகார், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள 85 மாவட்டங்களைக் கடந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நிறைவடையவுள்ளது.

மணிப்பூர் டூ மும்பை: ராகுல் காந்தியின் பாரத் நியாய யாத்ரா நடைபயணம் அறிவிப்பு!

இந்த அறிவிப்பை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பின்போது வெளியிட்டனர். யாத்திரையின் நோக்கங்கள் குறித்து பேசிய கே.சி.வேணுகோபால் பாரத் நியாய யாத்ரா எனும் பெயரிலேயே யாத்திரையின் நோக்கமான நீதி கோரல் இருக்கிறது என்றார்.

தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், தகவல் தொடர்பு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ், ‘சமுதாயத்தை பிளவுபடுத்தும் நடவடிக்கையை தொடங்க வேண்டும்’ என்று வாய் தவறி கூறிவிட்டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பாஜக, நெட்டிசன்கள் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வருகின்றனர்.

 

 

மோடி பரோசா என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து, “உண்மை அவர்களது நாவில் உள்ளது. சமூகத்தை பிளவுபடுத்தும் செயல்முறை தொடங்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இதுதான் காங்கிரஸின் யதார்த்தம்; முதலில் பாரத் ஜோடோ யாத்திரை; இப்போது பாரத் அநீதிக்கான யாத்திரை.” என பதிவிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios