Collegium To Take Call On 61 Names For High Court Judges Elevation

உயர்நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை தேர்வு செய்வதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள 61 நீதிபதிகளின் பெயர்கள் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் குழுவின் பரிசீலனைக்காக காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

61 நீதிபதிகள்

36 புதிய நீதிபதிகளின் நியமனத்திற்காக 8 உயர்நீதிமன்றங்கள் பரிந்துரை செய்துள்ளன. அதேபோல கூடுதல் நீதிபதிகளை தலைமை நீதிபதிகளாக பதவி உயர்த்துவதற்காக 25 நீதிபதிகளின் பெயர்களை 5 உயர்நீதிமன்றங்கள் பரிந்துரை செய்துள்ளன.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜே.எஸ். கேஹார் இருந்தபோதே இந்த 61 நீதிபதிகளின் பெயர்களும் பரிந்துரைகள் செய்யப்பட்டன. தற்போது அவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதை அடுத்து உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

இறுதி ஒப்புதலுக்காக

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பொறுப்பேற்ற பின்னர் நீதிபதிகள் நியமனத்திற்கு புதிய பரிந்துரைகள் எதுவும் செய்யப்படவில்லை.

இந்த நீதிபதிகள் பட்டியல் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் நியமன குழுவின் இறுதி ஒப்புதலுக்காக காத்து இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.