மேற்கு வங்காளத்தில் பாஜக தலைவர் அமித் ஷா ஹெலிகாப்டரை தரையிறங்க விடாமல் செய்த மம்தா பானர்ஜி, தற்போது உத்தரப்பிரதேச யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் இறங்கவும் தடை விதித்து அதகளப்படுத்தியிருக்கிறார். 

மேற்கு வங்காளத்தில் பலுர்காட் பகுதில் இன்று பா.ஜக. பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பேரணியில் உ.பி.முதல்வர் யோகி பங்கேற்க இருந்தது. இதற்காக யோகி நேற்று ஹெலிகாப்டரில் மேற்குவங்காளம் சென்றார். ஆனால், விமான நிலையத்தில் அவரது ஹெலிகாப்டரை தரையிறங்க அனுமதி வழங்கப்படவில்லை. 

இதன் காரணமாக பேரணியை ரத்து செய்துவிட்டு, மற்றொரு இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பங்கேற்க யோகி சென்றார். பிரதமர் மோடியைத் தவிர்த்து மேற்கு வங்காளத்தில் பிற பாஜக தலைவர்களுக்கு எதிராக  தொடர்ந்து மேற்கொண்டுவரும் நட்வடிக்கைகளை மம்தா பானர்ஜி தீவிரப்படுத்தியுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது.

 

தற்போது யோகியின் ஹெலிகாப்டரும் தரை இறங்க அனுமதி வழங்காததால் மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே மம்தா பானர்ஜியின் இந்த நடவடிக்கைக்கு, ஜனநாயகத்தை நசுக்காதீர்கள் மம்தா ஜி’ என்று  யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.