655 அறைகள்! 28 ஏக்கர்! புதிய தெலுங்கானா தலைமை செயலகத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் கே.சி.ஆர்.!!
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தெலுங்கானா செயலகத்தில் சுதர்சன யாகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தெலுங்கானா செயலகத்தில் இன்று (ஏப்ரல் 30) காலை சுதர்சன யாகம் நடத்தப்பட்டது. இன்று காலை 6 மணிக்கு இந்த யாகம் தொடங்கியது. மேஷ லக்னத்தில் சுதர்சன யாகம் தொடங்கியது. பின்னர் சண்டியாகம் செய்யப்படுகிறது.
தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆர் மதியம் 1:20 மணிக்கு தெலுங்கானா செயலகத்தை முறைப்படி திறந்து வைக்கிறார். அப்போது தெலுங்கானா முதல்வருடன் அமைச்சர்களும் அந்தந்த அறைகளில் அமர்வார்கள். முதல்வர் கே.சி.ஆர் தனது அறையில் அமர்ந்த பிறகு முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவார்.
இந்த தலைமை செயலகத்துக்கு டாக்டர் அம்பேத்கர் தலைமை செயலகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, தெலுங்கானா அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேசிஆர் பேசுகிறார். 28 ஏக்கர் பரப்பளவில் இந்த செயலகம் கட்டப்பட்டது. தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளுக்கு 8 ஆயிரம் டன் இரும்பு பயன்படுத்தப்பட்டது. 60 ஆயிரம் கன மீட்டர் சிமென்ட் பயன்படுத்தப்பட்டது. 11 லட்சம் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன.
இதையும் படிங்க..பொன்னியின் செல்வன் 2 முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா.! அடேங்கப்பா.!!
தெலுங்கானா செயலக திறப்பு விழா நிகழ்ச்சிக்கு சுமார் 2500 பேருக்கு அரசு அழைப்பு அனுப்பியுள்ளது. கடந்த 27 ஜூன் 2019 அன்று, தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆர் தெலுங்கானா செயலகம் கட்ட அடிக்கல் நாட்டினார். கொரோனா காரணமாக தெலுங்கானா செயலகம் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டது.
தெலுங்கானா புதிய செயலகத்தில் மொத்தம் 655 அறைகள் மற்றும் 30 மாநாட்டு அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. புதிய செயலகம் திறப்பு விழாவையொட்டி, டேங்க் பண்ட் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க..மே மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை.. முழு விபரம்.!!