உக்ரைன்-இந்தியா இடையே விமானப் போக்குவரத்தில் இருந்துவந்த கட்டுப்பாடுகள், பயோபபுள் முறையில் இருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டதாக மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
உக்ரைன்-இந்தியா இடையே விமானப் போக்குவரத்தில் இருந்துவந்த கட்டுப்பாடுகள், பயோபபுள் முறையில் இருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டதாக மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
உக்ரைன்-ரஷ்யா இடையிலான பதற்றமான சூழல் உருவாகியுள்ளதையடுத்து, இந்தியர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது

முன்னாள் சோவியத் அமைப்பில் இருந்த உக்ரைன் நாடு, நேட்டோ படையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால், உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு ரஷ்யா தடையாக இருக்கிறது. உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் போர்தொடுக்கவும் தயாராக இருக்கும் ரஷ்யா, படைகளை எல்லையில் குவித்துள்ளது. அதேசமயம், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும் குரல்எழுப்பியுள்ளதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
இதனால் உலக நாடுகள் தங்கள் நாட்டு மக்கள்உக்ரைனிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தி வருகின்றன. இந்த சூழலில் உக்ரைன்-ரஷ்யா இடையிலான விமானப்போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
இதுகுறித்து மத்திய விமானப்போக்குவரத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “ இந்தியா-உக்ரைன் இடையிலான பயோ-பபுள் முறையில் இயக்கப்படும் விமானங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. தனியார் விமானம் உட்பட எந்த விமாத்தையும் எத்தனை முறை வேண்டுமானாலும் இரு நாடுகளுக்கு இடையே இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் கேட்டுக்கொண்டதற்கு இனங்க இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இதற்கான நடவடிக்கையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் இணைந்து எடுத்துள்ளோம்” எனத் தெரிவித்தார்

கிவ் நகரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில் “ வரும்நாட்களில் தேவை கருதி அதிகமான விமானங்கள் இந்தியாவுக்கு இயக்கப்படும். உக்ரைனிலிருந்து இந்தியாவுக்கு போதுமான விமானங்கள் இல்லை என்ற புகார் எழுந்ததால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் உள்ளிட்ட யாரும் பதற்றப்பட வேண்டும், தேவையான அளவு விமானங்கள் இந்தியாவுக்கு இயக்கப்படும். உக்ரைன் இன்டர்நேஷனல், ஏர் அரேபியா, ப்ளை துபாய், கத்தார் ஏர்வேஸ் ஆகியவை தற்போது உக்ரைனுக்கு இயக்கப்பட்டு வருகின்றன”எ னத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்கிடையே உக்ரைனில் சூழல் பதற்றமாக இருந்து வருவதால், இந்தியமாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் உடனடியாகவ வெளியேறுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
