டெல்லி உட்பட இந்தியாவில் உள்ள 29 நகரங்கள் பூகம்பத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவையாக உள்ளன என தேசிய நில அதிர்வு ஆய்வு மையத்தின் அறிக்கை தெரிவிக்கி்றது. இந்த பட்டியலில் புதுச்சேரியும் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

நிலநடுக்கத்தால் மிக அதிக அளவில் பாதிக்கப்படும் நகரங்களின் பட்டியலில் டெல்லி மற்றும் 9 மாநில தலைநகரங்களும் இடம் பெற்றுள்ளன.

பீகார் மாநில தலைநகர் பாட்னா, ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகர் ,நாகலாந்து தலைநகர் கொகிமா, அசாம் தலைநகர் கவுஹாத்தி ,காங்டாக் , சிம்லா ,டேராடூன், இம்பால் ,சண்டிகார் உள்ளிட்ட நகரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக இமய மலைப்பகுதியில் உள்ள நகரங்கள் பூகம்பத்தால் அதிகம் பாதிக்கப்படும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

பூகம்பத்தால்அதிகம் பாதிக்கப்படும் நகரங்களின் பட்டியலில் புதுச்சேரியும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது,.

காஷ்மீர்.சிக்கிம்,டெல்லி, வடக்கு உ.பி., வடக்கு பீகார் மற்றும்அந்தமான் நிகோபர் தீவுகளும் பூகம்பம் அதிகம் பாதிக்கப்படும் மண்டலத்தில் உள்ளன.

இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.