இந்தியாவில் கொடி கட்டி பறந்த ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது நஷ்டத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையொட்டி, அம்பானிக்கு கடன் கொடுத்த சீன வாங்கிகள், நெருக்கடி கொடுத்து வருவதாக தெரிகிறது. 

தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிக்கேஷன் நிறுவனம் தற்போது, நஷ்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி, சீனா டெவலப்மென்ட் பேங்க், இண்டஸ்ட்ரியல் அண்டு கமர்ஷியல் பேங்க் ஆப் சீனா, எக்ஸிம் பேங்க் ஆப் சீனா ஆகிய வங்கிகள், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், தங்களுக்கு குறைந்தபட்சம், ரூ.14 ஆயிரத்து, 600 கோடி தரவேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளன.

இதனால், திவால் நடவடிக்கைக்கு தயாராகி உள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தனது சொத்துகளை விற்று கடன்களை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதைதொடர்ந்து, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரூ.57,382 கோடி கடன் வழங்கிய நிறுவனங்களின் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது.