அருணாச்சலப்பிரதேசத்துக்கு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வந்ததற்கு சீனா எதிர்ப்பு.. புத்தி மாறாத சீனா.!
இந்திய குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு அருணாச்சலப்பிரதேசம் மாநிலம் சென்றதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து அழிச்சாட்டியம் செய்திருக்கிறது.
அருணாச்சலப்பிரதேசத்தை சொந்தம் கொண்டாடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது சீனா. இந்திய தலைவர்கள் அருணாச்சலப்பிரதேசம் செல்லும்போதெல்லாம், சீன வெளியுறவுத் துறையை வைத்து கண்டிப்பதையும் வாடிக்கையாகவே வைத்திருக்கிறது சீனா. இதேபோல அருணாச்சலப்பிரதேசத்திலிருந்து சீனா செல்வோருக்கு விசா வழங்குவதில் மாறுபட்ட அணுகுமுறையைப் பின்பற்றுவது என்று சீனாவின் அழிச்சாட்டியங்களுக்கு அளவில்லை.
இந்நிலையில் இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு கடந்த 9-ஆம் தேதி அருணாச்சலப்பிரதேசத்துக்குச் சென்றார். துணை குடியரசுத் தலைவரின் அருணாச்சலப்பிரதேச பயணத்துக்கு வழக்கம்போல் சீனா எதிர்ப்பு தெரிவித்தது. சீனாவின் எதிர்ப்புக்கு இந்தியா பதிலடி கொடுத்திருக்கிறது. இதுதொடர்பாக இந்திய தரப்பில் வெளியிட்டுள்ள செய்தியில், “அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இந்தியத் தலைவர்கள் வழக்கமாக வேறு இந்திய மாநிலங்களுக்கு எப்படிச் செல்கிறார்களோ அதுபோல் அருணாச்சலப் பிரதேச மாநிலத்துக்கும் பயணம் செய்கிறார்கள்.
இந்தியத் தலைவர்கள் அருணாச்சலப்பிரதேசத்துக்கு வருகை தருவதை எதிர்ப்பது அர்த்தமற்றது. லடாக் எல்லையில் நிலவும் தற்போதைய சூழலுக்குக் காரணம், இரு தரப்பு ஒப்பந்தத்தை மீறி சீனா தன்னிச்சையாக நிலையை மாற்றியமைத்ததுதான்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.