Child sexual abuse - the Women was arrested

கணவர் இல்லை... திருமணமாகி சென்றுவிட்ட மகள்கள்... தனிமை வாட்டிய 45 வயது பெண், 14 வயதே ஆன சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடுமை ஆந்திராவில் நடந்துள்ளது.

ஆந்திர பிரதேசம், விஜயவாடாவில் உள்ள வேம்பே காலனியைச் சேர்ந்த 14 வயதே ஆன சிறுவன் ராகுல். பள்ளி கோடை விடுமுறைக்காக சில நாட்களுக்கு முன்பு தன் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளான்.

பள்ளி விடுமுறை முடியும் தருவாயில், ராகுலின் பெற்றோர் ஊர் திரும்ப அழைத்தனர். ஆனால் சிறுவன் ராகுல் வர மறுத்துள்ளான். இது குறித்து சிறுவனிடம் அவர்கள் விசாரித்தபோது, வீட்டுக்கு எதிரில் 45 வயதுடைய பெண் ஒருவர் அவனை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து பாலியல் வன்புணர்வு கொண்டிருந்தது தெரியவந்தது.

பாலியல் வன்புணர்வு பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் அந்த பெண் மிரட்டியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர். நுன்னா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

ராகுலின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவருக்கு கணவர் இல்லை என்பதும் 2 மகள்களையும் திருமணம் செய்து கொடுத்தப்பின் தனியாக இருப்பது தெரியவந்தது.

இதன் பின்னர் குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.