Asianet News TamilAsianet News Tamil

சிதம்பரம் கார் டிரைவரை கூட விட்டுவைக்காத அமலாக்கத்துறை... துருவித் துருவி விசாரணை..!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தற்போது லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் தற்போது முன்ஜாமின் மறுத்துள்ளது.

Chidambaram Car Driver... CBI Investigation
Author
Delhi, First Published Aug 21, 2019, 1:04 PM IST

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தற்போது லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் தற்போது முன்ஜாமின் மறுத்துள்ளது.

இதனால் ப.சிதம்பரம் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் நேற்று இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் அமலாக்கத்துறை முன்பாக சிதம்பரம் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சிதம்பரத்தின் டெல்லி இல்லத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. பின்னர் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்தின் வீட்டில் முன் குவிந்தனர். அவர் வீட்டில் இருந்தால் விசாரணைக்கு அழைத்துச் சென்று விடலாம் என்ற நோக்கத்தில் குவிந்திருந்த அதிகாரிகளுக்கு ஏமாற்றமே மிச்சம் ஆனது. Chidambaram Car Driver... CBI Investigation

காரணம் சிதம்பரத்தின் டெல்லி இல்லம் அமைந்துள்ள லோதி எஸ்டேட் சாலையில் தோண்டி தடவிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. சிபிஐ அதிகாரிகள் வருவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு வரை லோதி எஸ்டேட் சாலையில் ப.சிதம்பரத்தின் மொபைல் ஆனில் இருந்துள்ளது. அதற்குப் பிறகு சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. Chidambaram Car Driver... CBI Investigation

இதனை எடுத்து பார் சிதம்பரத்தின் கார் டிரைவர் மற்றும் அவரது வீட்டிலுள்ள சமையல்காரர் வேலைக்காரர் ஆகியோரிடமும் அமலாக்கத் துறை அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போகிற போக்கைப் பார்த்தால் சிதம்பரத்தை நேரில் பார்த்தால் அமலாக்கத் துறை அதிகாரிகள் தூக்கி விடுவார்கள் என்று தெரிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios