நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்பட்டு, பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்கு குழு ஒன்றை அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுப்பதற்காக , நீர்நிலைகளை நவீன தொழில்நுட்பம் மூலம் தூர்வாரி முறையாக பராமரிக்க வேண்டுமென உத்திரவிடக் கோரி வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிபதிகள , நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்பட்டு, பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய குழு ஒன்றை அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் பொதுப்பணித்துறை செயலாளர் பிராபாகர் , வருவாய்த்துறை செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் நேரில் ஆஜராகினர். மேலும் இந்த வழக்கு மீதான விசாரணையை டிசம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.