நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாத் பூஜா பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சாத் பூஜை என்பது பீகார், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பெரிய அளவில் கொண்டாடப்படும் விழாவாகும்.

சூரியக் கடவுளுக்கும் மற்றும் அவரது மனைவிக்கும் நன்றி சொல்ல நடத்தப்படும் இந்து மத விழா இது. 4 நாட்களுக்கு இது நடைபெறும். 4வது நாளில் நீர் நிலைகளில் கூடி மக்கள் பூஜை செய்து சூரிய பகவானை வழிபடுவர்.

இதில் குடும்பத்தில் உள்ள பெண்கள், அதிகாலையில் ஆற்றில் பூ, பழம் உள்ளிட்டவைகளை வைத்து, அதனை கையில் ஏந்தி சூரியனுக்கு படையலிட்டு வணங்குவார்கள். இந்த விழா பெரும்பாலும் வடமாநிலங்களில் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.