Chandrayaan-3 : ISRO: 'சந்திரயான்-3' ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படலாம்: இஸ்ரோ நம்பிக்கை
சந்திரயான்-3 (Chandrayaan-3 )விண்கலம் வரும் ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படலாம், சந்திரயான்-3 விண்கலத்துக்கான லேண்டர் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்துவிட்டது என்று இஸ்ரே(ISRO) தெரிவித்துள்ளது.
சந்திரயான்-3 விண்கலம் வரும் ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படலாம், சந்திரயான்-3 விண்கலத்துக்கான லேண்டர் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்துவிட்டது என்று இஸ்ரே(ISRO) தெரிவித்துள்ளது.
நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பும் ஆள் இல்லா விண்கலம் சந்திரயான். சந்திரயான்-1 கடந்த 2008ம் ஆண்டு அனுப்பிய நிலையில், சந்திரயான்-2 விண்கலம் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 22ம தேதி ஜிஎஸ்எல்பி மாக்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆகஸ்ட் 20ம் தேதி நிலவின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் சந்திரயான்-2 சென்றது.
பிரசவம் முடிந்த சிறிது நேரத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய பெண்
2019, செப்டம்பர் 6ம் தேதி நிலவின் தென்போலார் மண்டலத்தில் சந்திரயான்-2 விண்கலம் தரையிறங்க முயன்றது. அப்போது சாஃப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்க முயன்றபோது, தொழில்நுட்ப கோளாறால் விண்கலம் சந்திரனின் தரைப்பகுதியில் விழுந்தது. இதனால், சந்திரயான்-2 விண்கலத்தில் இருக்கும் ரோவர் உள்ளிட்ட பல்வேறு கருவிகளால் முறையாகச் செயல்படமுடியவில்லை.
இதையடுத்து சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. நிலவில் விண்கலம் இறங்கும்போது ஏற்பட்ட கோளாறைச் சரி செய்யும் முயற்சியில் இறங்கிய இஸ்ரோ நிறுவனம் இதற்காக மின்னு மற்றும் காந்தப்புல பரிசோதனையை வெற்றிகமராகநடத்தி முடித்துள்ளது.
கடந்த ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2ம் தேதி யு ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் இந்த பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதுதான் பிளான்! அவர்களால் 100 இடங்களில்கூட ஜெயிக்க முடியாது! நிதிஷ் குமார் உறுதி
இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில் “ சந்திரயான்-3 விண்கலம் விண்வெளிச் சூழலில் எவ்வாறு செயல்படும் என்பதற்காக மின்னனு மற்றும் காந்தப்பரிசோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணுக்குச் செலுத்துவதற்கு ஆயத்தமாகவதில் இந்தப் பரிசோதனை முக்கிய மைல்கல்.
சந்திரயான்-3 விண்கலத்தில் 3 முக்கிய பகுதிகள் உள்ளன.
புரபுல்சன் பகுதி, லேண்டர் பகுதி, ரோவர் பகுதியாகும். அதாவது புரபுல்சன்பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ பகுதிக்கு கொண்டு செல்லும். .லேண்டர் பகுதி நிலவில் தரையிறங்கும் பகுதியும், ரோவர் பகுதி, நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ- அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
சந்திரயான்-3 லேண்டர் பரிசோதனை, லாஞ்சர் திறன், ஆன்டெனா சிஸ்டம், உள்ளிட்ட பல பரிசோதனைகள் உறுதி செய்யப்பட்டுவிட்டன. இந்த கருவிகளின் செயல்பாடுகள் திருப்தியாக உள்ளன” எனத் தெரிவித்துள்ளது.
சந்திரயான்-3 விண்கலத்தில் பணிகள் முடியும் தருவாயில் இருப்பதால், ஜூன் மாதத்தில் விண்ணில் செலுத்தப்படலாம் என்று இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன