Asianet News TamilAsianet News Tamil

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு.. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.8, டீசல் ரூ.6 குறைப்பு.. அமைச்சர் அறிவிப்பு

பெட்ரோல் மீதான் கலால் வரியை லிட்டருக்கு ரூ8 யும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ6 யும் குறைத்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும் கலால் வரி குறைப்பால், பெட்ரோல் மீது ரூ.9.50. , டீசல் மீது ரூ.7 ம் விலை குறையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
Centre cuts excise duty on petrol, diesel by Rs 8 and Rs 6 per litre
Author
India, First Published May 21, 2022, 7:11 PM IST

பெட்ரோல் மீதான் கலால் வரியை லிட்டருக்கு ரூ8 யும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ6 யும் குறைத்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும் கலால் வரி குறைப்பால், பெட்ரோல் மீது ரூ.9.50. , டீசல் மீது ரூ.7 ம் விலை குறையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஒரு ஆண்டிற்கு 12 கேஸ் சிலண்டர்களுக்கு தலா ரூ200 மானியம் வழங்கப்படும் என்றும் நாட்டில் சிமெண்ட் விலையை குறைக்கவும் சிமெண்ட் கிடைப்பதை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

இறக்குமதி சார்ந்த பிளாஸ்டிக் மூலப்பொருட்களுக்கான சுங்க வரியும் குறைக்கப்படும். சில உருக்கு மூகப்பொருட்களின் இறக்குமதி வரியும் குறைக்கப்படும். சில எஃகு பொருட்களுக்கு ஏற்றுமதி வரி விதிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios