உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காசியாபாத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தில், இந்திய ராணுவத்தை  (மோடி கி சேனா) மோடியின் படை என்று பேசினார். இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதிபற்றி எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தன. இதுபற்றி விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் யோகி ஆதித்யநாத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் முன்னாள் ராணுவ தளபதியும் பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சருமான வி.கே. சிங், உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  
 “இந்திய ராணுவத்தை மோடி கி சேனா என்று வர்ணித்தவர்கள் துரோகிகள். பாஜகவுக்காக பிரசாரம் செய்பவர்கள் எல்லோருமே தங்களை ராணுவம் என்று கூறிக்கொள்கின்றனர், அவர்கள் எந்த ராணுவத்தைப் பற்றி பேசுகின்றனர்? இந்திய ராணுவத்தைப் பற்றியா?  யாராவது இந்திய ராணுவத்தை மோடியின் ராணுவம் என்று அழைத்தால் அது தவறு மட்டுமல்ல, அப்படி பேசுபவர்கள் ள் துரோகிகள். ராணுவம் என்பது இந்திய நாட்டுக்கு சொந்தமானது. எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமல்ல.” என்று கடுமையாக வி.கே. சிங் என்று செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். 
தன் கட்சியை சேர்ந்த முதல்வருக்கு மத்திய அமைச்சரே கடுமையாகப் பதிலடி கொடுத்திருப்பது பாஜகவிலும் டெல்லி அரசியலிலும் சூட்டைக் கிளப்பியுள்ளது.