சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பின் மாணவர்கள் செய்ய வேண்டியது என்னென்ன..? முழு விவரம்..
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளன. இந்த வாரம் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி தொடங்கு மே மாதம் 24 ஆம் தேதி முடிவடைந்தது . இந்த தேர்வு 29 நாட்கள் நடைபெற்றன. இந்நிலையில் இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று நேற்று முதல் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது புது தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இதுக்குறித்து இன்னும் இடைநிலைக் கல்வி வாரியம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளன. இந்த வாரம் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி தொடங்கு மே மாதம் 24 ஆம் தேதி முடிவடைந்தது . இந்த தேர்வு 29 நாட்கள் நடைபெற்றன. இந்நிலையில் இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று நேற்று முதல் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது புது தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இதுக்குறித்து இன்னும் இடைநிலைக் கல்வி வாரியம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை, cbse.gov.in என்ற இணையதளம் மூலம் பார்க்கலாம். எஸ்எம்எஸ் மூலமாக மாணவர்களின் செல்போன் எண்ணிற்கு முடிவுகள் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ வாரியம் சமீபத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போர்ட்டலான பரிக்ஷா சங்கம்( http://parikshasangam.cbse.gov.in/. ) எனும் இணையத்தளத்தில் 10 ஆம் வகுப்பு முடிவுகள் அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த இணையதளம் மூலமாக மாணவர்கள், தங்களது விடைத்தாள் நகல் அல்லது மறுமதிப்பீடு போன்ற அனைத்து கோரிக்கைகளையும் செய்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:CBSE: இன்று வெளியாகிறது சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்? அதனை பார்ப்பது எப்படி?
இந்தாண்டு சிபிஎஸ்இ , மாணவர்களுக்கு கொடுக்கப்படும் சான்றிதழ் மற்றும் வெளியிடப்படும் முடிவுகளில் Fail என்ற சொல்லிற்கு பதிலாக "Essential Repeat" என்று குறிப்பிடப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளது. DigiLocker எனும் செயலி மூலம் மாணவர்கள் முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம். இதுதொடர்பான தகவல்கள் அனைத்தும் சிபிஎஸ்இ-யில் பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ளன.மேலும் மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ், இடமாறுதல் சான்றிதழ், திறன் சான்றிதழ் உள்ளிடவற்றையும் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். இந்த செயலியை மொபையில் கூகுள் பிளேயில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
உங்களுடைய பதிவு எண், ரோல் எண்ணின் கடைசி 6 இலக்கம் மற்றும் OTP உள்ளிட்டவற்றை பதிவிட்டு, சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியானவுடன் வாரியம், வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியிடும். மதிப்பெண்களின் திருப்தி இல்லாத மாணவர்கள், மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தங்களது விடைத்தாளின் புகைப்பட நகலைப் பெற்றுக்கொள்ளலாம். அதோடுமட்டுமல்லாமல், மறுதேர்வு குறித்தான தேர்வுக் கால அட்டவணை வெளியிடப்படும்.
மேலும் படிக்க:சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறதா..? புதிய தகவல்..
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகி 15 நாட்களுக்கு டெலி கவுன்சிலிங் நடத்தப்படும். மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை வாரியத்தால் வெளியிடப்படும் கட்டணமில்லா எண் மூலம் கேட்டுக்கொள்ளலாம். அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 வரை மாணவர்களோ அல்லது பெற்றோர்களோ தேர்வு முடிவு குறித்தான தகவல்களை கேட்டு பெற்றுக் கொள்ளலாம். 2021 -22 கல்வியாண்டில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக சிபிஎஸ்இ தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. அதன் படி முதல் பருவத்தேர்வுகள் கடந்த ஆண்டும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற்றன. இரண்டாம் பருவத்தேர்வுகள் இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டேர்ம் I மற்றும் டேர்ம் II ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முடிவு இன்று மதியம் அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுக்குறித்து தேர்வு வாரியம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
- 10th cbse result 2022
- cbse 10th result 2022
- cbse 10th result 2022 Marksheet
- cbse class 10th result 2022
- cbse result 2022
- cbse result 2022 Scorecard
- cbse result 2022 class 10 term 2
- cbse results.nic.in 2022
- cbse. nic. in result 2022
- cbse.gov.in 2022 class 10 result
- cbse.nic.in 2022 result
- CBSE Class 10 results 2022