CBSE board Exams 2023 Data Sheet:அலர்ட்! சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை இன்று வெளியீடு?

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணை இன்று எந்தநேரமும் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CBSE Board Exam Date Sheet 2023: The Board is expected to release the Class 10, 12, and 13 timetables Today

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணை இன்று எந்தநேரமும் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் சார்பில் இதுவரை தேர்வு அட்டவணை எப்போது வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில் சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்புக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணை 19ம் தேதி(இன்று) வெளியிடப்படலாம். சிபிஎஸ்இயின் அதிகாரபூர்வ இணையதளமான cbse.gov.in  என்ற தளத்தில் மட்டும் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கின்றன.

மாநில அந்தஸ்து கோரும் ரங்கசாமியின் பேச்சு நாடகத்தின் உச்சகட்டம் - திமுக குற்றச்சாட்டு

மத்திய கல்வித்துறை மற்றும் சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் தகவலின்படி “ சிபிஎஸ்இ 10ம் வகுப்பு இறுதித் தேர்வு 2023, பிப்ரவரி 16ம் தேதியும், 12ம் வகுப்பு இறுதித் தேர்வு பிப்ரவரி 15ம் தேதியும் வெளியிடப்படும்”எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு ஜனவரி 1ம் தேதி தொடங்குகிறது. 

மாணவர்கள் சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மட்டுமே தேர்வு தேதி அட்டவணையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. சமீபத்தில் சிபிஎஸ்இ இணையதளம் போன்று, போலியான இணையதளம் உருவாக்கப்பட்டு அதில் மாணவர்களிடம் பதிவுக்கட்டணம் கோரியது. இது தொடர்பாக பிஐபி உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்தி அது போலியான இணையதளம் என்று அறிவித்தது.

ஸ்விக்கியில் அம்மாவா..? ‘அம்மா முதல் பெட்ரோல் வரை.!’ 2022ல் ஸ்விக்கியில் மக்கள் தேடியது இதைத்தான்!

சிபிஎஸ்இ-யின் அதிகாரபூர்வ இணையதளம் போன்றே போலியான இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆதலால், தேர்வு அட்டவணை பார்க்கும்போது மாணவர்களும், பெற்றோரும் மத்திய அரசின் உண்மையான இணையதளத்தில் தெரிந்து கொள்ள வேண்டும்.போலியான இணையதளம் என்பது நீலநிறத்தில் டேப் இருக்கும், அட்மிட் கார்டு பேமெண்ட் போன்றவற்றை கேட்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உண்மையான சிபிஎஸ்இ இணையதளத்தில் 5 டேப்கள் இருக்கும். ஹோம்பேஜ், அகெடமிக் வெப்சைட், பரிக்ஸா சங்கம், சராஸ், ரிசல்ட் மற்றும்மெயின் வெப்சைட் குறிப்பிட்டிருக்கும். போலி இணையதளத்தில் 4 டேப்கள்தான்தரப்பட்டிருக்கும் ஆதலால், யுஆர்எல் முகவரியை வைத்து மாணவர்கள், பெற்றோர் அடையாளம் காண வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios