cbsc school sent noice for kurcon school

அலட்சியப் போக்கே மாணவனின் படுகொலைக்கு காரணம் என குற்றம் சாட்டிய சி.பி.எஸ்.இ, பள்ளியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டு இருக்கிறது.

கொடூர கொலை

அரியானா மாநிலம் குர்கானில் உள்ள ரயான் இன்டர்நேஷனல் பள்ளியின் 2-ம் வகுப்பு மாணவன் பிரத்யூமன் குமார் தாகூர், பாலியல் பலாத்கார முயற்சியின்போது கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டான்.

இந்த படுகொலை குறித்து பள்ளியின் பஸ் கண்டக்டர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த படுகொலை குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

சி.பி.எஸ்.இ குழு

இதற்கிடையில் இந்த கொலை குறித்து உண்மைகளை கண்டறிவதற்காக, மத்திய கல்வி வாரியம் ( சி.பி.எஸ்.இ. ) சார்பில் இரு நபர் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவின் அறிக்கைப்படி, பள்ளியின் பாதுகாப்பில் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே மாணவனின் மரணத்துக்கு காரணம் என்றும், விழிப்புடன் செயல்பட்டு இருந்தால் இந்த மரணத்தை தடுத்து இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நோட்டீஸ்

அதைத் தொடர்ந்து சி.பி.எஸ்.இ சார்பில் அந்த பள்ளிக்கு ‘‘உங்கள் பள்ளியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கு 15 நாட்களில் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. இரு நபர் விசாரணை குழு அறிக்கையில் மேலும் கூறப்பட்ட இருப்பதாவது-

‘‘பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமும் கவனக்குறைவுமே இந்த துயர சம்பவத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. மாணவர்களின் பாதுகாப்புக்கு உறுதி அளிக்க நிர்வாகம் தவறிவிட்டது.

அடிப்படை விதிகள்

பள்ளி நிர்வாகிகள் தங்கள் கடமையை பொறுப்புடன் செய்திருந்தால், துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவத்தை தவிர்த்து இருக்க முடியும். வாரியம் வகுத்துள்ள அடிப்படை பாதுகாப்பு விதிமுறைகளைக்கூட கடைப்பிடிக்க நிர்வாகம் தவறி விட்டது.

பள்ளியின் டிரைவர், கண்டக்டர்கள், கிளீனர்களுக்கு என்று, கழிவறை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. ஆசிரியர் மற்றும் மாணவர்களின் கழிவறைகளைத்தான் அவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

கண்காணிப்பு கேமராக்கள்

மேலும் பற்றியின் சுற்றுப்புற வேலி ஒயர்களால் அமைக்கப்பட்டு உள்ளது. யாரும் எளிதில் உள்ளே நுழைந்துவிடும் வகையில் மிகவும் பாதுகாப்பற்ற முறையில் இந்த வேலி உள்ளது. போதுமான அளவுக்கு கண்காணிப்பு கேமராக்கள் பள்ளியில் பொருத்தப்படவில்லை. பொருத்தப்பட்டள்ள கேமராக்களில் பல வேலை செய்யவில்லை.

நிகழ்ச்சி நாளன்று துயர சம்பவம் நடந்தவுடன், போலீஸ் நிலையத்தில் புகார் செய்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவோ, அல்லது மாவட்ட கல்வி அதிகாரி, மற்றும் சி.பி.எஸ்.இ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவோ பள்ளி நிர்வாகம் தவறிவிட்டது. கொலை செய்யப்பட்ட மாணவனின் பெற்றோர்தான் போலீசில் புகார் செய்து உள்ளனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.