Asianet News TamilAsianet News Tamil

லாலு பிரசாத் வீடுகளில் சி.பி.ஐ. அதிரடி “ரெய்டு”...

CBI raids Lalu Prasad Yadav his family over corruption charges in allotment of IRCTC hotels
CBI raids Lalu Prasad Yadav, his family over corruption charges in allotment of IRCTC hotels
Author
First Published Jul 7, 2017, 9:28 AM IST


ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் அவரின் குடும்பத்தினருக்கு சொந்தமான 12 வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2006ம் ஆண்டு மத்திய ரெயில்வே துறை அமைச்சராக ஏராளமான முறைேகடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, லாலுபிரசாத்,  அவரின் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் ஊழல் வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தி வருகின்றனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

CBI raids Lalu Prasad Yadav, his family over corruption charges in allotment of IRCTC hotelsடெல்லி, பாட்னா, ராஞ்சி, பூரி, குர்கான் உள்ளிட்ட 12 நகரங்களில் லாலுபிரசாத், அவரின் குடும்பத்தினருக்கு சொந்தமான வீடுகளில் இந்த சோதனை நடந்து வருகிறது.

ரெயில்வே துறை அமைச்சராக லாலுபிரசாத் இருந்தபோது, ஐ.ஆர்.சி.டி.சிக்கு சொந்தமான ரெயில்வே ஓட்டல்களை பராமரிக்க ராஞ்சி, பூரி நகரில் உள்ள தனியார் ஓட்டல்களுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது தொடர்பாக சி.பி.ஐ. சோதனை நடத்தி வருகிறது.

மேலும,் ஐ.ஆர்.சி.டி.சி.முன்னாள் மேலாளர் பி.கே.கோயல், சுஜாதா, லாலுவின் மனைவின் நம்பிக்கைக்குரியவரான பிரேம் சந்த் குப்தா ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் பிரேம் சந்த் குப்தா என்பவர், முன்னாள் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios